சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வயதான தம்பதி கொலை வழக்கில் உறவினர் உட்பட 3 பேர் கைது

Added : ஆக 04, 2021
Share
Advertisement
திருத்தணி: திருத்தணியைச் சேர்ந்த வயதான தம்பதியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவுக்காரர் உட்பட, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.திருத்தணி, மாருதி நகரைச் சேர்ந்தவர் சஞ்சீவி 70; இவரது மனைவி மாலா 60. சஞ்சீவி, சீட்டு, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த ஜூலை 29ம் தேதி, சஞ்சீவி, மனைவியுடன் காணாமல் போனதை அறிந்த அவரது சகோதரர் பாபு, திருத்தணி போலீசில் புகார்

திருத்தணி: திருத்தணியைச் சேர்ந்த வயதான தம்பதியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவுக்காரர் உட்பட, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி, மாருதி நகரைச் சேர்ந்தவர் சஞ்சீவி 70; இவரது மனைவி மாலா 60. சஞ்சீவி, சீட்டு, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த ஜூலை 29ம் தேதி, சஞ்சீவி, மனைவியுடன் காணாமல் போனதை அறிந்த அவரது சகோதரர் பாபு, திருத்தணி போலீசில் புகார் அளித்தார்.
ஆந்திர மாநிலம் புத்துார் அருகே ராமச்சந்திரபுரம் காட்டுப்பகுதியில், தம்பதி கொலை செய்யப்பட்டு, முட்புதரில் வீசப்பட்டு இருந்தது தெரியவந்தது. விசாரணையில், சஞ்சீவியின் தங்கை மகன் ரஞ்சித்குமார் 27; அவரது நண்பர்கள் விமல்ராஜ் 25; ராபர்ட் 25, ஆகியோர் கொன்றது தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், தலா இரு கார்கள், இருசக்கர வாகனங்கள், 46 சவரன் தங்க நகை மற்றும் 8 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
ரஞ்சித்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:
நான் திருத்தணியில் இனிப்பு விற்பனை கடை வைத்துள்ளேன். இதற்காக, தாய் மாமன் சஞ்சீவி பரிந்துரைப்படி, அவரது மருமகனான, சித்துாரில் வசிக்கும் பழனி என்பவரிடம் 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். பணத்தை திருப்பித் தர பழனி மற்றும் சஞ்சீவி வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து தாய் மாமன், அவரது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு, கடந்த ஜூலை 29ம் தேதி காரில் புத்துார் அடுத்த அப்பாலயகுண்டா பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். மற்றொரு காரில், நண்பர்களான ராபர்ட், விமல்ராஜ் பின் தொடர்ந்து வந்தனர். தரிசனம் முடிந்ததும், காட்டுப் பகுதியில் காரை நிறுத்திய போது, நண்பர்கள் இருவரும் வந்து பிரேக் ஓயரால், தம்பதியின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின், அங்குள்ள முட்புதரில், உடலை வீசி வந்து விட்டோம். கொலையை திசை திரும்ப, மாமா சஞ்சீவியின் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணத்தை திருடிச் சென்றேன். அதை, விமல்ராஜிடம் கொடுத்து வைத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார், மூவரையும் கைது செய்து, திருத்தணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X