கோர்ட் செய்தி

தமிழ்நாடு

முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சென்னை:முன்னுரிமை அடிப்படையில் பள்ளி கல்லுாரி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்லுாரி மாணவர்கள் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தக் கோரி நேர்வழி இயக்கம் அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கு தலைமை

சென்னை:முன்னுரிமை அடிப்படையில் பள்ளி கல்லுாரி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லுாரி மாணவர்கள் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தக் கோரி நேர்வழி இயக்கம் அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சுகாதாரத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:கடந்த ஜூலை 6 வரை 1.59 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்லுாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.உயர் நிலைப்பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எந்த வழிமுறைகளையும் பிறப்பிக்கவில்லை. அதனால் அதை அமல்படுத்த முடியாது. வழிமுறைகள் பிறப்பிக்கப்பட்ட பின் உடனடியாக அரசு அமல்படுத்தும்.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கில் பார் கவுன்சில் தேசிய மருத்துவ கமிஷன் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு பார்மசி கவுன்சில் ஆகியவற்றையும் பிரதிவாதிகளாக சேர்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆக. 12ம் தேதிக்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X