பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தணி கோவிலில் தெப்பத் திருவிழா

Added : ஆக 04, 2021
Share
Advertisement
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், 2ம் நாள் தெப்பத் திருவிழா பக்தர்கள் இன்றி நடந்தது.திருத்தணி முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடந்தது. இரண்டாம் நாள் தெப்பத் திருவிழாவையொட்டி, மாலை 5:00 மணிக்கு மலைக்கோவில் காவடி மண்டபம் அருகே அமைத்த தற்காலிக குளத்தில் தெப்பத்தில் உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், 2ம் நாள் தெப்பத் திருவிழா பக்தர்கள் இன்றி நடந்தது.
திருத்தணி முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடந்தது. இரண்டாம் நாள் தெப்பத் திருவிழாவையொட்டி, மாலை 5:00 மணிக்கு மலைக்கோவில் காவடி மண்டபம் அருகே அமைத்த தற்காலிக குளத்தில் தெப்பத்தில் உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
அதன்பின், சிறப்பு தீபாராதனை முடிந்ததும், குளத்தில் ஐந்து முறை வலம் வந்து அருள்பாலித்தார். கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இல்லாமல் நடத்த தெப்பத் திருவிழா, 'ஆன்லைன்' மற்றும் 'யு டியூப்' மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X