கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் இறந்த பெண் எஸ்.ஐ., கணவருக்கு இழப்பீடு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சென்னை: விபத்தில் இறந்த போலீஸ் எஸ்.ஐ.யின் கணவருக்கு, 68.95 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்தவர் மான்குயில், 32; போலீஸ் உதவி ஆய்வாளர். இவர், வண்டலுார் - வாலாஜாப்பேட்டை சாலையில், கடந்த 2018 டிசம்பரில், ஸ்கூட்டரில் சென்றார். அப்போது, அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, அவர் சென்ற ஸ்கூட்டரில்

சென்னை: விபத்தில் இறந்த போலீஸ் எஸ்.ஐ.யின் கணவருக்கு, 68.95 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்தவர் மான்குயில், 32; போலீஸ் உதவி ஆய்வாளர். இவர், வண்டலுார் - வாலாஜாப்பேட்டை சாலையில், கடந்த 2018 டிசம்பரில், ஸ்கூட்டரில் சென்றார். அப்போது, அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, அவர் சென்ற ஸ்கூட்டரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மான்குயில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மனைவி இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி, மான்குயிலின் கணவர் விஜயகுமார், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி கார்த்திகேயன், மனுதாரருக்கு இழப்பீடாக 68.95 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், 'தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' நிறுவனம் வழங்க உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X