பொது செய்தி

தமிழ்நாடு

3வது அலையில் இருந்து மக்களை காப்பாத்துங்க!

Added : ஆக 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:மூன்றாவது கொரோனா அலையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமென, சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்க தலைவர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:தொற்று பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கையை வேகமாகவும், கடுமையாகவும் அமலாக்க வேண்டும்.இரண்டாவது அலை பாதிப்பில் இருந்து தொழில்துறை சிறிதளவு

திருப்பூர்:மூன்றாவது கொரோனா அலையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமென, சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்க தலைவர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:தொற்று பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கையை வேகமாகவும், கடுமையாகவும் அமலாக்க வேண்டும்.இரண்டாவது அலை பாதிப்பில் இருந்து தொழில்துறை சிறிதளவு மீண்டு வந்துள்ளது. மீண்டும் மூன்றாவது அலை வராமல், மக்களை பாதுகாக்க வேண்டும். அரசு துரிதமாக செயல்பட்டு நோயை தடுக்க வேண்டும்.குறைந்த ஆட்களையும், தொழிலாளர்களையும் கொண்டு செயல்படும் தொழிற்சாலைகளில், 100 சதவீதம் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையை பின்பற்றும் நிறுவனங்களை, இயக்கத்துக்கு அனுமதிக்க வேண்டும்.இனியும் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டால், தொழிலை யாராலும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X