பொது செய்தி

தமிழ்நாடு

பறவைகள் சரணாலயமாகும் நஞ்சராயன் குளம்: வனத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:பறவைகள் சரணாலயமாக மாற்றும் கோரிக்கை தொடர்பாக, சென்னையில் இருந்து வந்த வனத்துறை அதிகாரிகள் குழுவினர், நஞ்சாயரன் குளத்தை நேரில் ஆய்வு செய்தனர்.திருப்பூர் மாநகராட்சி எல்லையில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தில், வலசை வரும் வெளிநாட்டு பறவைகள், அதிக நாட்கள் தங்கி செல்வது வழக்கம். இந்த குளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு, திருப்பூர் இயற்கை

திருப்பூர்:பறவைகள் சரணாலயமாக மாற்றும் கோரிக்கை தொடர்பாக, சென்னையில் இருந்து வந்த வனத்துறை அதிகாரிகள் குழுவினர், நஞ்சாயரன் குளத்தை நேரில் ஆய்வு செய்தனர்.திருப்பூர் மாநகராட்சி எல்லையில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தில், வலசை வரும் வெளிநாட்டு பறவைகள், அதிக நாட்கள் தங்கி செல்வது வழக்கம். இந்த குளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு, திருப்பூர் இயற்கை கழகம் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வருகிறது.மாவட்ட நிர்வாகமும் பரிந்துரைத்தது. அதன் பயனாக, வனத்துறையின் கூடுதல் முதன்மை வனப்பாதுகாப்பு அதிகாரி அசோக் தீப் பர்வா தலைமையில், மாவட்ட வனச்சரகர்கள், வனக்காவலர்கள் அடங்கிய குழு, நேற்று முன்தினம், நஞ்சராயன் குளத்தை பார்வையிட்டது.திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:நஞ்சராயன் குளத்தை, பறவைகள் சரணாலயமாக மாற்றும் கோரிக்கையை ஆராய, சென்னையில் இருந்து, வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு, திருப்பூர் வந்து ஆய்வு மேற்கொண்டது.திருப்பூர் இயற்கை கழகத்தின், 20 உறுப்பினர்கள், 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பினர், திருப்பூர் அறிவியல் இயக்கத்தினர், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும், தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதை கண்டு அசந்துபோன குழுவினர், கட்டாயம் கூடுதல் முயற்சி எடுக்கப்படுமென உறுதி அளித்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X