கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தாமிர பட்டயம், 400 ஏக்கர் நிலம் மீட்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சென்னை:திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயிலின் தாமிர பட்டயத்தையும் 400 ஏக்கர் நிலத்தையும் மீட்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. \அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் வழங்கி விசாரணையை நீதிமன்றம்தள்ளி வைத்து உள்ளது.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு:திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை கிராமத்தில்

சென்னை:திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயிலின் தாமிர பட்டயத்தையும் 400 ஏக்கர் நிலத்தையும் மீட்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

\அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் வழங்கி விசாரணையை நீதிமன்றம்தள்ளி வைத்து உள்ளது.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு:திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை கிராமத்தில் பக்தவத்சல பெருமாள் கோயில் உள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

இந்த கோயிலுக்கு விஜயரகுநாத அரசர் 400 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி உள்ளார். இந்த நிலம் தற்போது பலரின் வசம் உள்ளது. முறையான குத்தகை வாடகை வசூலிக்கப்படுவது இல்லை.கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலம் புனரமைப்பு விபரங்கள் தாமிர பட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த தாமிர பட்டயம் தற்போது கோயிலில் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உள்ள அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்துக்கு இதை அனுப்பியதாகவும் கோயிலுக்கு திருப்பி தரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்; 400 ஏக்கர் நிலத்தில் 7 ஏக்கர் நிலம் தான் கோயில் வசம் உள்ளது; மற்றவை தனியார் வசம் உள்ளன. இந்த நிலங்களின் மதிப்பு 5000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். நிலங்களை அளவீடு செய்தால் தான் மீட்க முடியும்.எனவே தாமிர பட்டயத்தை; 400 ஏக்கர் நிலங்களை மீட்க அரசுக்கு அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கோரியதால் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X