பொது செய்தி

தமிழ்நாடு

செயல் குறித்து தலைமுறை பேசட்டும்... குளம், குட்டையை தூர்வார வேண்டும்! 'நம்ம குளம்' திருவிழாவில் யோசனை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:''திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள, 85 ரோட்டரி சங்கங்கள் இணைந்து, தலா ஒரு குளம் அல்லது குட்டைகளை துார்வாரி சுத்தம் செய்ய திட்டமிட வேண்டும்,'' என, ரோட்டரி மாவட்ட கவர்னர் சண்முகசுந்தரம் பேசினார்.திருப்பூர் மேற்கு ரோட்டரி, மேற்கு ரோட்டரி நொய்யல் நீர் மேலாண்மை அறக்கட்டளை, சாமளாபுரம் குளம் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில்,
 செயல் குறித்து தலைமுறை பேசட்டும்... குளம், குட்டையை தூர்வார வேண்டும்! 'நம்ம குளம்' திருவிழாவில் யோசனை

திருப்பூர்:''திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள, 85 ரோட்டரி சங்கங்கள் இணைந்து, தலா ஒரு குளம் அல்லது குட்டைகளை துார்வாரி சுத்தம் செய்ய திட்டமிட வேண்டும்,'' என, ரோட்டரி மாவட்ட கவர்னர் சண்முகசுந்தரம் பேசினார்.திருப்பூர் மேற்கு ரோட்டரி, மேற்கு ரோட்டரி நொய்யல் நீர் மேலாண்மை அறக்கட்டளை, சாமளாபுரம் குளம் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், துார்வாரி, கரைகளை வலுப்படுத்தி, குளம் புனரமைக்கப்பட்டுள்ளது.ஆடிப்பெருக்கை முன்னிட்டு, 'நம்ம குளம்' திருவிழா நேற்று நடந்தது. ஸ்ரீ வருண ஜபம் உட்பட பல வழிபாடுகள் நடந்தன. குளத்துக்குள் அமைந்துள்ள, தீவு போன்ற மண் மேட்டில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராம் மற்றும் வனம் அமைப்பினர், மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.'நம்ம குளம்' திருவிழாவுக்கு, தலைவர் ரகுபதி தலைமைவகித்தார். பொருளாளர் ஆறுமுகன் இறைவணக்கம் பாடினார். நொய்யல் நீர் மேலாண்மை அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து:சாமளாபுரம் குளம், சுற்றுலாத்தலமாக மாற்றப்பட வேண்டும். இயற்கையை பாதுகாக்க, இறைவன் தன்னார்வலர் வடிவில் உலா வருகிறார்; பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உலகை வாழவைக்க ஆண்டவன் உழவரை படைத்துள்ளார்.'வனம்' செயலாளர் சுந்தர்ராஜ்:குளக்கரையில், 50 ஆயிரம் பனை மரக்கன்றுகள் நட்டு வளர்க்க திட்டமிட்டுள்ளோம்; பனை வளர்ப்பதால், இப்பகுதி செல்வ செழிப்பாக இருக்கும்.ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன்:உலக மக்களை போலியோவில் இருந்து காத்த பெருமை, ரோட்டரி சங்கங்களுக்கு உண்டு. தற்போது, குளம் துார்வாருவதல் புத்துயிர் பெற்றுள்ளது. கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடத்துவது போல், குளம், குட்டைகளையும் புனரமைப்பு செய்து பாதுகாக்க வேண்டும்.மாவட்ட கவர்னர் சண்முகசுந்தரம்:இயற்கையை பாதுகாக்க, அனைவரும் தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும். கோவை, திருப் பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள, 85 ரோட்டரி சங்கங்கள் இணைந்து, தலா ஒரு குளம் அல்லது குட்டைகளை துார்வாரி சுத்தம் செய்ய திட்டமிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X