கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுமியிடம் அத்துமீறல் குற்றவாளிக்கு சிறை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
மடிப்பாக்கம்: மடிப்பாக்கத்தில், சிறுமியிடம் அத்துமீறியவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணாபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் பேச்சி முத்து, 50. இவர், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2016ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த

மடிப்பாக்கம்: மடிப்பாக்கத்தில், சிறுமியிடம் அத்துமீறியவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணாபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் பேச்சி முத்து, 50. இவர், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2016ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. 2019ம் ஆண்டு நவம்பரில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, பேச்சிமுத்துவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, பேச்சி முத்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த ஜூன் 30ம் தேதி, இவரது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு, மகிளா நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஜூலை 27ம் தேதி பேச்சிமுத்து ஜாமினில் வெளிவரமுடியாத, 'பிடிவாரன்ட்'ஐ மகிளா நீதிமன்றம் பிறப்பித்தது.
இந்நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு வந்த பேச்சிமுத்துவை, மடிப்பாக்கம் மகளிர் போலீசார் கைது செய்தனர். பின், மகிளா நீதிமன்ற நீதிபதி அம்பிகா உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X