பொது செய்தி

தமிழ்நாடு

ஆடிப் பெருக்கு; களை கட்டிய உற்சாகம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஆடிப்பெருக்கு பண்டிகை திருப்பூரில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.வீடுகளில் மக்கள் புத்தாடை அணிந்தும், உறவினர், நண்பர்கள் சூழ, பொது இடங்களில் துாரி ஆடியும் மகிழ்ந்தனர்.மரங்களிலும், தற்காலிக சாரம் கட்டியும் சிறுவர்கள், இளம் பெண்கள் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர்.கோவில்களில் வழக்கமான ஆகம விதிகளின்படி அன்றாட பூஜைகள் நடைபெற்றன. ஆனால் இவற்றில்
 ஆடிப் பெருக்கு; களை கட்டிய உற்சாகம்

திருப்பூர்:ஆடிப்பெருக்கு பண்டிகை திருப்பூரில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.வீடுகளில் மக்கள் புத்தாடை அணிந்தும், உறவினர், நண்பர்கள் சூழ, பொது இடங்களில் துாரி ஆடியும் மகிழ்ந்தனர்.மரங்களிலும், தற்காலிக சாரம் கட்டியும் சிறுவர்கள், இளம் பெண்கள் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர்.கோவில்களில் வழக்கமான ஆகம விதிகளின்படி அன்றாட பூஜைகள் நடைபெற்றன. ஆனால் இவற்றில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.இதனால், பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் கோவில் வாசலில் நின்று வழிபட்டு சென்றனர்.ஆடி பெருக்கு முன்னிட்டு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தன. இருப்பினும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X