சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு தரப்பு மோதல்; 7 பேர் கைது வாலிபர் மீது கார் ஏற்றி பயங்கரம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடத்தில், 'ஹான்ஸ்' கேட்டதால் ஏற்பட்ட அடிதடி காரணமாக, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.கவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில், அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. அங்கு, இரு கோஷ்டியை சேர்ந்த, 15க்கும் மேற்பட்டவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி, இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். இதில் தொடர்புடைய ஏழு பேரை போலீசார் கைது

பல்லடம்:பல்லடத்தில், 'ஹான்ஸ்' கேட்டதால் ஏற்பட்ட அடிதடி காரணமாக, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.கவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில், அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. அங்கு, இரு கோஷ்டியை சேர்ந்த, 15க்கும் மேற்பட்டவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி, இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். இதில் தொடர்புடைய ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.போலீசார் கூறியதாவது:ரோட்டோரம் மது அருந்திய ஒரு கோஷ்டியிடம், மணிகண்டன் என்பவர் 'ஹான்ஸ்' கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதனால், போதையில் இருந்த இரு கோஷ்டியினரும் ஆட்களை திரட்டி வந்து மோதி கொண்டனர்.இதில், ராயர்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன், கர்ணன், சங்கரலிங்கம் ஆகிய மூவரும் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தில், பிரபு என்பவர் சங்கரலிங்கத்தின் மீது கார் ஏற்றி, 200 மீ., தூரம் இழுத்து சென்றதில், அவரின் கால் முறிந்தது.இந்த வழக்கில், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கனகராஜ் 35, சக்திவேல் 25, சரவணக்குமார் 27, மகேஷ் 25, விக்கி 22 மற்றும் ராயர்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் 27, கர்ணன், 28 ஆகிய ஏழு பேர் மீதும், கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள கதிர், பிரபுவை தேடி வருகிறோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X