பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பத்திரங்களுக்கு இன்னும் குறையவில்லை மவுசு

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்த பின்னரும், தேர்தல் பத்திரங்களுக்கான மவுசு குறையவில்லை. ஜூலை மாதத்தில் 150.51 கோடி ரூபாய்க்கான கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளன.முன்பெல்லாம் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு, பெரு நிறுவனங்கள் மறைமுகமாக பண உதவி செய்யும். 30 கோடி ரூபாய்ஆனால், சமீப ஆண்டுகளாக தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டு, அவற்றை கட்சி அனுதாபிகள் யார்
தேர்தல் கடன் பத்திரங்கள், குறையவில்லை, மவுசு

ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்த பின்னரும், தேர்தல் பத்திரங்களுக்கான மவுசு குறையவில்லை. ஜூலை மாதத்தில் 150.51 கோடி ரூபாய்க்கான கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளன.

முன்பெல்லாம் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு, பெரு நிறுவனங்கள் மறைமுகமாக பண உதவி செய்யும்.


30 கோடி ரூபாய்


ஆனால், சமீப ஆண்டுகளாக தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டு, அவற்றை கட்சி அனுதாபிகள் யார் வேண்டுமானாலும் வாங்கி, கட்சிகளுக்கு அன்பளிப்பாக வழங்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை மாதத்தில் 150.51 கோடி ரூபாய்க்கான கடன் பத்திரங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதில், 97.31 கோடி ரூபாய்க்கான பத்திரங்கள், பாரத ஸ்டேட் வங்கியின் கோல்கட்டா பிரதான கிளையிலும், 30 கோடி ரூபாய்க்கான பத்திரங்கள், சென்னை கிளையிலும், 10 கோடி ரூபாய்க்கான பத்திரங்கள், ஐதராபாத் கிளையிலும் விற்கப்பட்டுள்ளன.


latest tamil news


இதில், தலா 1 கோடி ரூபாய் முக மதிப்புள்ள 126 பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. அதேபோல், 23.60 கோடி ரூபாய் அளவுக்கு 10 லட்சம் ரூபாய் முக மதிப்புள்ள பத்திரங்களும் விற்பனையாகி உள்ளன. ஜூலை 1 முதல் 10ம் தேதிக்குள், இவை விற்பனை ஆகியுள்ளன. இதுவரை 17 கட்டங்களாக, பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் கடன் பத்திரங்களை விற்பனை செய்துள்ளது.இதன் வாயிலாக, அரசியல் கட்சிகளுக்கு 7,380 கோடி ரூபாய் வரவு கிடைத்துள்ளது.


நடப்புக் கணக்கு


பாரத ஸ்டேட் வங்கி 1,௦௦௦ ரூபாய், 10 ஆயிரம் ரூபாய், 1 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய் மற்றும் 1 கோடி ரூபாய் என்ற இனங்களில், தேர்தல் பத்திரங்களை வெளியிட்டு உள்ளது. கட்சி அபிமானிகளோ, தொழில் துறையினரோ, யாருக்கும் தெரியாமல் வாங்கி, அரசியல் கட்சிகளுக்குக் கொடுக்கலாம். பதிவு பெற்ற அரசியல் கட்சிகள், இத்தகைய பத்திரங்களை, வங்கியில் செலுத்தி, அதற்கு உரிய தொகையை தங்கள் நடப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

இந்தியாவில் பெரிய அரசியல் கட்சிகள் கூட, இதுவரை தாங்கள் பெற்ற பத்திரங்களின் விபரங்களை வெளியிடவில்லை. கடந்த 2018ல், 1,056.73 கோடி ரூபாய்க்கும், 2019ல், 5,071.99 கோடி ரூபாய்க்கும், 2020ல், 363.96 கோடி ரூபாய்க்கும், தேர்தல் கடன் பத்திரங்களை, பாரத ஸ்டேட் வங்கி விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
04-ஆக-202113:13:35 IST Report Abuse
Suppan இவை கடன் பத்திரங்களல்ல. பத்திரங்கள்தான்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-ஆக-202108:38:16 IST Report Abuse
Kasimani Baskaran வங்கியே இதில் ஏதாவது முறைகேட்டில் இறங்கியிருக்கிறதா என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது.
Rate this:
Cancel
04-ஆக-202106:46:50 IST Report Abuse
ஆரூர் ரங் சமீப காலத்தில் திமுக வுக்கும் 75 காலை 😎தேர்தல் பத்திரங்கள் வந்துள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X