பொது செய்தி

தமிழ்நாடு

விபத்து ஏற்படும் ரோட்டில் அதிகாரிகள் கள ஆய்வு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் காங்கயம் ரோட்டில், வேலன் ஓட்டலுக்கு அடுத்து, இரண்டு கி.மீ., துாரம் வரை, அடிக்கடி வாகன விபத்து நடப்பதாக, போலீஸ் பதிவில் தெரியவந்துள்ளது.கடந்த மாதம் நடந்த மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில், இதுகுறித்து கலெக்டர் வினீத் விசாரணை நடத்தியுள்ளார். அதன்படி, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் கூட்டாய்வு நடத்தி, உரிய வழிகாட்டு தல்
 விபத்து ஏற்படும் ரோட்டில் அதிகாரிகள் கள ஆய்வு

திருப்பூர்:திருப்பூர் காங்கயம் ரோட்டில், வேலன் ஓட்டலுக்கு அடுத்து, இரண்டு கி.மீ., துாரம் வரை, அடிக்கடி வாகன விபத்து நடப்பதாக, போலீஸ் பதிவில் தெரியவந்துள்ளது.கடந்த மாதம் நடந்த மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில், இதுகுறித்து கலெக்டர் வினீத் விசாரணை நடத்தியுள்ளார். அதன்படி, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் கூட்டாய்வு நடத்தி, உரிய வழிகாட்டு தல் வழங்க உத்தரவிடப்பட்டது. நேற்று காலை, டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி, ஆர்.டி.ஓ., ஜெகநாதன், நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழு, காங்கயம் ரோடு பகுதியை ஆய்வு செய்தது.ஆர்.டி.ஓ., ஜெகநாதன் கூறுகையில், ''டி.ஆர்.ஓ., நேரில் ஆய்வு செய்து, உரிய அறிவுரை வழங்கினார். தேவையான இடங்களில், வேகத்தடை அமைப்பது. பேரிகார்டு வைத்து, வாகன வேகத்தை குறைப்பது என, தேவையான நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யலாம் என, போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி களு டன் ஆலோசனை நடத்தப்பட்டது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X