குன்னுார்:குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் பயிற்சி மையத்துக்கு வந்த, மேற்கு பிராந்திய படைவீரர்களின் தலைவர் மன்ஞ்சிந்த் சிங், ராணுவ போர் நினைவு சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.குன்னுார் வெலிங்டன் பகுதியில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டருக்கு, சண்டிகாரில் உள்ள மேற்கு பிராந்திய படை வீரர்களின் தலைமை அலுவலகத்திற்கு புதிய தலைவராக பொறுப்பேற்ற, கர்னல் ஆப் மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் லெப்டினன்ட் ஜெனரல் மன்ஞ்சிந்த் சிங் வருகை தந்தார்.ராணுவ பயிற்சி கல்லுாரி அருகே உள்ள போர் நினைவு சதுக்கத்தில், ராணுவ மரியாதையுடன் மலர் வளையம் வைத்து, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து போர் நினைவு சதுக்கத்தை சுற்றி வந்து, பதிவு செய்த விபரங்களை பார்வையிட்டார்.தொடர்ந்து, மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் இளம் ராணுவ வீரர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்ச்சியில் பேசினார். நிகழ்ச்சிக்கு, ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் ராஜேஷ்வர் சிங் தலைமை வகித்தார். பிற ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE