விதிமீறிய பணிகள்: தடுத்து நிறுத்திய வனத்துறை | Dinamalar

விதிமீறிய பணிகள்: தடுத்து நிறுத்திய வனத்துறை

Added : ஆக 04, 2021
ஊட்டி:மஞ்சூர் அருகே, யானை வழித்தடத்தை ஒட்டிய பகுதியில் நடந்த பணிகளை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.மஞ்சூர் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட 'பென்ஸ்டாக்' அருகே, அடர்ந்த வனப்பகுதியையொட்டி, தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது. 'தனியார் வனபாதுகாப்பு சட்டத்தின் படி, அடர்ந்த வனப்பகுதியையொட்டிய யானை வழித்தடத்தில் காடுகளை அழித்து பணிகள் நடத்த கூடாது,' என, கோர்ட்

ஊட்டி:மஞ்சூர் அருகே, யானை வழித்தடத்தை ஒட்டிய பகுதியில் நடந்த பணிகளை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.மஞ்சூர் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட 'பென்ஸ்டாக்' அருகே, அடர்ந்த வனப்பகுதியையொட்டி, தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது. 'தனியார் வனபாதுகாப்பு சட்டத்தின் படி, அடர்ந்த வனப்பகுதியையொட்டிய யானை வழித்தடத்தில் காடுகளை அழித்து பணிகள் நடத்த கூடாது,' என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், அப்பகுதியில், 'பொக்லைன்' பயன்படுத்தி, மரங்களை வெட்டியும்; நிலத்தை சமன் படுத்தியும், இரவு, பகலாக பணிகள் நடந்துள்ளன. இதனை அறிந்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்து பணிகளை நிறுத்தினர்.மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா கூறுகையில், ''பென்ஸ்டாக் பகுதியில் பணிகள் நடக்கும் இடம் யானைகள் வசிப்பிடமாகும். அந்த இடத்தில் நடந்த பணிகள் குறித்து, உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,'' குறிப்பிட்ட இடத்தில் ஆய்வு செய்து, விதிமீறல் இருந்தால் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X