சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் நூதன மோசடி: நகையுடன் பிடிபட்ட பெண் கைது

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ராயபுரம்: ராயபுரம் மருத்துவமனையில், பெண்ணிடம் நுாதன முறையில் மோசடியில் ஈடுபட்ட மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.திருவொற்றியூர், கிருபை நகரைச் சேர்ந்தவர் சாந்தி 43. இவரது மகள் ஷீலா, ராயபுரம், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் கடந்த ஜூலை 27ம் தேதி பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். ஷீலா பிரசவ அறைக்குச் சென்ற நிலையில், அவரது ஒன்றரை சவரன் செயின், கம்பல் மற்றும் 2,000 ரூபாயை,

ராயபுரம்: ராயபுரம் மருத்துவமனையில், பெண்ணிடம் நுாதன முறையில் மோசடியில் ஈடுபட்ட மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர், கிருபை நகரைச் சேர்ந்தவர் சாந்தி 43. இவரது மகள் ஷீலா, ராயபுரம், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் கடந்த ஜூலை 27ம் தேதி பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். ஷீலா பிரசவ அறைக்குச் சென்ற நிலையில், அவரது ஒன்றரை சவரன் செயின், கம்பல் மற்றும் 2,000 ரூபாயை, தாய் சாந்தியிடம் கொடுத்துள்ளார்.
இதைக் கவனித்த அருகில் இருந்த பெண், 'என் மகளுக்கும் அறுவை சிகிச்சை வாயிலாக குழந்தை பிறக்க உள்ளது. 'எனவே இருவருக்கும் ரத்தம் தேவைப்படும், ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்று ரத்தத்திற்கு ஏற்பாடு செய்யலாம்' எனக்கூறி, அவரை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அப்பெண் சாந்தியிடம், 'ரத்த வங்கியின் உள்ளே எதுவும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. கையில் இருப்பதை என்னிடம் கொடுத்து விடுங்கள்' எனக் கூறியுள்ளார். இதை நம்பி சாந்தி, நகை, பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். உள்ளே சென்று வந்து திரும்பி பார்த்தபோது, அப்பெண் மாயமானது தெரியவந்தது.
இது குறித்து ராயபுரம் போலீசார் விசாரித்தனர். இதில், சேத்துப்பட்டு, ஓசன்குலத்தைச் சேர்ந்த சாந்தி 53, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X