சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்: சென்னை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ரூ.2 லட்சம் மதிப்பு பொருட்கள் திருட்டுஅம்பத்துார்: அம்பத்துார் தொழிற்பேட்டையில், இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளவர் வடிவேலன் 40. இங்கு, 10க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். கடந்த, 1ம் தேதி கொல்கத்தாவைச் சேர்ந்த மனோஜ், நவாப் ஆகியோர் சொந்த ஊர் சென்றனர். திரும்ப தொழிற்சாலைக்கு வந்த வடிவேலன், அங்கிருந்த 2 லட்சம் ரூபாய்

ரூ.2 லட்சம் மதிப்பு பொருட்கள் திருட்டு

அம்பத்துார்: அம்பத்துார் தொழிற்பேட்டையில், இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளவர் வடிவேலன் 40. இங்கு, 10க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். கடந்த, 1ம் தேதி கொல்கத்தாவைச் சேர்ந்த மனோஜ், நவாப் ஆகியோர் சொந்த ஊர் சென்றனர். திரும்ப தொழிற்சாலைக்கு வந்த வடிவேலன், அங்கிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான, உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் திருடு போயிருப்பதை அறிந்தார். அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

கல்லுாரி மாணவி தற்கொலை
பம்மல்: பம்மலை அடுத்த பொழிச்சலுார், இரட்டை மலை சீனிவாசன் தெருவைச் சேர்ந்தவர் செல்ல கருப்பு; அப்பள வியாபாரி. இவரது மகள் சினேகா 19; தனியார் கல்லுாரி மாணவி. சினேகா இரண்டு ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வலியால் அவதிப்பட்ட அவர், வீட்டின் கீழ்தளத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

வாலிபருக்கு 'போக்சோ'

புளியந்தோப்பு: புளியந்தோப்பு காவல் நிலையத்தில், 17 வயது சிறுமியின் தாய், கடந்த ஜூலை 31ம் தேதி முதல் தன் மகளை காணவில்லை என புகார் அளித்தார். விசாரணையில், புளியந்தோப்பு, வ.உ.சி.நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் 22, என்பவர் ஆசை வார்த்தை கூறி, சிறுமியை திருமணம் செய்தது தெரிந்தது. மேலும் சிறுமி நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பதும் தெரிந்தது. தினேஷை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சிறுவனுக்கு கத்திக்குத்து
சென்னை: ஓட்டேரியைச் சேர்ந்த, 17 வயது சிறுவன், கீழ்ப்பாக்கம் வரதம்மாள் தோட்டம் பகுதியில் அவரது நண்பன் விஜய் என்பவருடன் கஞ்சா புகைக்கச் சென்றுள்ளார். அப்போது ஓட்டேரியைச் சேர்ந்த சீனி 25, என்பவர் உட்பட நான்கு பேர் கும்பல் அங்கு சென்றது. அவர்கள் 'மதனை கொன்றது நீ தானே' எனக்கூறி, கத்தியால் சிறுவனை சரமாரியாக வெட்டி தப்பினர். சிறுவனை அவரது நண்பன் விஜய் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். தலைமைச்செயலக குடியிருப்பு போலீசார் சிறுவனிடம் புகாரைப் பெற்று தலைமறைவான நால்வரை தேடுகின்றனர்.

ரூ.44 லட்சம் மோசடி; ஒருவர் கைது

அமைந்தகரை: சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி 33. கடந்த 2018ல் நொளம்பூரைச் சேர்ந்த கிஷோர் பிரபு 43, என்பவர் பள்ளி சார்ந்த தொழில் துவங்கலாம் என்றும், அதில் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறி, 44 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றினார். அமைந்தகரை போலீசார் கிஷோர் பிரபுவை கைது செய்தனர்.

போலீஸ் ரெய்டு: 350 கிலோ குட்கா பறிமுதல்
கொடுங்கையூர்: கொடுங்கையூர், எழில் நகரில் உள்ள பெட்டிக் கடையில் குட்கா பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில், 150 கிலோ குட்கா சிக்கியது. குட்கா விற்ற வியாசர்பாடி, தேபர் நகரைச் சேர்ந்த மாரிமுத்து, 45, என்பவர் கைது செய்யப்பட்டார்.* செங்குன்றம் அடுத்த நல்லுார், காந்தி நகர், நேதாஜி தெருவைச் சேர்ந்த இளங்கோ, 53, பெங்களூருவில் இருந்து, குட்கா பொருட்களை கடத்தி வந்து, சென்னை பெரம்பூர், அம்பத்துார் பகுதி வியாபாரிகளுக்கு விற்பதாக, செங்குன்றம் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இவர் வீட்டை சோதனையிட்ட போது, 200 கிலோ குட்கா பொருள் சிக்கியது. இதன் மதிப்பு, 2 லட்சம். இளங்கோவை கைது செய்த போலீசார், இரு சக்கர வாகனம் மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர்.

டூவீலர்கள் திருடிய 11 பேர் கைது

நகரி: ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில், டூவீலர் திருட்டில் ஈடுபட்ட வினோத்குமார் உள்ளிட்ட, 11 பேரை கைது செய்த ஆந்திர போலீசார், 107 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டோரில் நான்கு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்; மற்ற ஏழு பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X