பொது செய்தி

தமிழ்நாடு

ஏழை கலைஞர்களுக்கு வாழ்வளிக்கும் வரலட்சுமி பொம்மை தயாரிப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சென்னை: வரலட்சுமி உருவ பொம்மை தயாரிப்பதன் மூலம், ஏழை, எளிய கலைஞர்கள், கொரோனா காலத்தில் குடும்பத்தைக் காப்பாற்ற தேவையான வருமானத்தை சம்பாதித்து வருகின்றனர்.ஆந்திரா, கர்நாடகாவில் பிரபலமான 'வரலட்சுமி விரதம்' சமீப ஆண்டுகளாக தமிழகத்திலும் பிரபலமாகி வருகிறது. பதினாறு வகை செல்வங்களுக்கும் அதிபதியான லட்சுமியின் அருள்வேண்டி, ஆடி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில்
ஏழை கலைஞர்களுக்கு வாழ்வளிக்கும் வரலட்சுமி பொம்மை தயாரிப்பு

சென்னை: வரலட்சுமி உருவ பொம்மை தயாரிப்பதன் மூலம், ஏழை, எளிய கலைஞர்கள், கொரோனா காலத்தில் குடும்பத்தைக் காப்பாற்ற தேவையான வருமானத்தை சம்பாதித்து வருகின்றனர்.
ஆந்திரா, கர்நாடகாவில் பிரபலமான 'வரலட்சுமி விரதம்' சமீப ஆண்டுகளாக தமிழகத்திலும் பிரபலமாகி வருகிறது. பதினாறு வகை செல்வங்களுக்கும் அதிபதியான லட்சுமியின் அருள்வேண்டி, ஆடி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில் விரதமிருந்து கொண்டாடப்படுவதே வரலட்சுமி விரதமாகும்.
இந்தாண்டு விழா வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கணவரின் நலனை முன்னிறுத்த, சுமங்கலி பெண்கள் செய்யும் இந்த வழிபாட்டில் பங்கேற்போருக்கு, மங்களப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்படும்.
இந்நாளில், வீட்டைச் சுத்தம் செய்து விளக்கேற்றி, வாசனைப் புகையால் இல்லத்தை நிறைத்து, கலசம் ஒன்றில் லட்சுமியை வைத்து வணங்குவர். கலசத்தினுள், பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு உள்ளிட்டவை போட்டு கலசத்தைப் பட்டாடையால் அலங்கரிப்பர். பின் தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினாலான லட்சுமியின் முகத்தை, கலசத்திலுள்ள தேங்காயில் வைப்பர். மஞ்சள் சரட்டை, குங்குமத்தில் கலந்து கலசத்தில் அணிவிப்பர்.
பூஜை முடிந்த பின் கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை, விரதமிருந்தவர் கையில் கட்டுவர். பின்னர், படைக்கப்பட்ட பொருட்களுடன், தாம்பூலம், மஞ்சள், புடவை போன்றவற்றை, சுமங்கலிகளுக்குத் தானமாகக் கொடுத்து ஆசி பெற்று, காலை முதல் உண்ணா நோன்பிருந்ததை முடித்து, தாமும் உணவருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.
இவ்வளவு சிறப்பு மிக்க வரலட்சுமி விரதத்தின் போது பயன்படுத்துவதற்காக, இப்போது விதவிதமான வரலட்சுமி பொம்மைகளை வாங்கி வருகின்றனர். சென்னை, நங்கநல்லுாரில் உள்ள 'சாய் கல்யாண் கிரியேஷன்' நிறுவனத்தினரால் தயாரிக்கப்படும் வரலட்சுமி பொம்மைகளுக்கு நிறைய வரவேற்பு கிடைத்துள்ளது.
காரணம் இந்த பொம்மைகள் சுற்றுச்சுழலுக்கு கேடு ஏற்படுத்தாத விதத்தில், துணி மற்றும் உலோகங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பொம்மைகளுக்கு நவீன நகைகள் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. 500 ரூபாயில் இருந்து 6,000 ரூபாய் வரையிலான இந்த பொம்மைகள் தயாரிப்பில், இந்த பகுதியில் உள்ள ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தோர் ஈடுபட்டுள்ளனர்.
சாய் கல்யாண் கிரியேஷன் நிறுவனத் தலைவர் காத்தியாயினி பிரகாஷ் கூறுகையில், ‛‛மக்களின் ஆதரவு காரணமாக பொம்மை தயாரிப்பில் உள்ள இவர்களது எண்ணிக்கையும் வருமானமும் தற்போது கூடியுள்ளது. கொரோனா காலத்தில் வரலட்சுமி அம்மன் எங்களுக்கு வாழ்வழித்து வருகிறார் என்றே கூற வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X