வீடு ஒப்படைப்பதில் தாமதம்: இழப்பீடு வழங்க உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீடு ஒப்படைப்பதில் தாமதம்: இழப்பீடு வழங்க உத்தரவு

Added : ஆக 04, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை: ஒப்பந்தப்படி, வீட்டை ஒப்படைக்காத கட்டுமான நிறுவனம், பாதிக்கப்பட்ட இருவருக்கு தலா, 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.கோயம்பேடில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், வீடு வாங்க, மோகன் பரேக் என்பவர், 62.44 லட்ச ரூபாய், ஷீத்தல் எம்.பரேக் என்பவர்

சென்னை: ஒப்பந்தப்படி, வீட்டை ஒப்படைக்காத கட்டுமான நிறுவனம், பாதிக்கப்பட்ட இருவருக்கு தலா, 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
கோயம்பேடில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், வீடு வாங்க, மோகன் பரேக் என்பவர், 62.44 லட்ச ரூபாய், ஷீத்தல் எம்.பரேக் என்பவர் 61.45 லட்ச ரூபாயும் செலுத்தினர். ஆனால், ஒப்பந்தப்படி அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை.
இது குறித்து ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டனர். இந்த மனுக்கள் மீது ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அதிகாரி சரவணன் பிறப்பித்த உத்தரவு:
மோகன் பரேக் செலுத்திய, 62 லட்ச ரூபாயில் 36 லட்ச ரூபாய் வங்கியில் இருந்து பெறப்பட்டது. எனவே, இத்தொகையை, கட்டுமான நிறுவனம் வட்டியுடன் வங்கிக்குச் செலுத்த வேண்டும். மீதமுள்ள, 26 லட்ச ரூபாயை மனுதாரரிடம் கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும்.
இதே போன்று ஷீத்தல் பரேக் செலுத்திய 61.45 லட்ச ரூபாயில், 35.83 லட்ச ரூபாய் வங்கியில் இருந்து பெறப்பட்டது. எனவே, இத்தொகையை கட்டுமான நிறுவனம் வட்டியுடன் வங்கியில் திருப்பி செலுத்த வேண்டும். மீதியுள்ள, 25.61 லட்ச ரூபாயை மனுதாரரிடம் கட்டுமான நிறுவனம் செலுத்த வேண்டும்.
இந்த இரண்டு மனுதாரர்களுக்கும் தலா, 1 லட்ச ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவுக்காக, தலா, 25 ஆயிரம் ரூபாயும் கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X