பத்திரப்பதிவு ஆபீசில் பெண் திடீர் தர்ணா| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பத்திரப்பதிவு ஆபீசில் பெண் திடீர் தர்ணா

Added : ஆக 04, 2021
Share
திருவொற்றியூர்: திருவொற்றியூர், விம்கோ நகர், சக்திபுரத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது முதல் மனைவி அமுதா. இரு ஆண்டுகளுக்கு முன் சேகர் இறந்துவிட்டார். சேகரின் 1,200 சதுரடி வீட்டில், இரண்டாவது மனைவி அபிபா வசித்து வந்தார். வீடு தொடர்பாக அமுதா, அபிபாவுக்கு பிரச்னை ஏற்பட்டது. இது குறித்த வழக்கு திருவள்ளூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஜூலை 29ம் தேதி,

திருவொற்றியூர்: திருவொற்றியூர், விம்கோ நகர், சக்திபுரத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது முதல் மனைவி அமுதா. இரு ஆண்டுகளுக்கு முன் சேகர் இறந்துவிட்டார்.
சேகரின் 1,200 சதுரடி வீட்டில், இரண்டாவது மனைவி அபிபா வசித்து வந்தார். வீடு தொடர்பாக அமுதா, அபிபாவுக்கு பிரச்னை ஏற்பட்டது. இது குறித்த வழக்கு திருவள்ளூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஜூலை 29ம் தேதி, திருவொற்றியூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், வீட்டை தன் பெயருக்கு அமுதா பத்திரப்பதிவு செய்துள்ளார்.
இது தெரிந்து, அபிபா, தன் உறவினர் திருநங்கை ரீனாவுடன், மெழுகுவர்த்தி ஏந்தி சார் - பதிவாளர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X