பெங்களூரு ஏரிகள் ஆக்ரமிப்பு: 136 ஏக்கர் நிலம் மீட்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பெங்களூரு: பெங்களூரில், 58 ஏரிகளில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 136 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து மீட்டனர்.பெங்களூரின் பல பகுதிகளில் உள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வருவாய் துறையினர், நடவடிக்கை எடுத்தனர். இதன் அடிப்படையில், ஒரு நாள் நடத்திய ஆய்வில் 136 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டதில் எலஹங்காவில் 21 ஏரிகளில்.

பெங்களூரு: பெங்களூரில், 58 ஏரிகளில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 136 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து மீட்டனர்.
பெங்களூரின் பல பகுதிகளில் உள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வருவாய் துறையினர், நடவடிக்கை எடுத்தனர். இதன் அடிப்படையில், ஒரு நாள் நடத்திய ஆய்வில் 136 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டதில் எலஹங்காவில் 21 ஏரிகளில். 52 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. ஏரியிலிருந்து பிரிந்து செல்லும் சிறிய குளங்கள் தான் பெரும்பான்மையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறியதாவது:
பெங்களூரு கிழக்கு தாலுகாவில் கிட்டகனுார், பையப்பனஹள்ளி, முல்லுார், வர்த்துார் உட்பட சில இடங்களில் 39 ஏக்கரும்; ஆனேக்கல் பகுதியில், 11 ஏரிகளில் 14 ஏக்கரும் மீட்கப்பட்டன. பெங்களூரு வடக்கில் உள்ள பன்னர்கட்டா ஏரியில் 17 ஏக்கர் ஆக்கிரமிப்பு இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர, தாவரகரே, மைலசந்தரா, குப்பல்லா உட்பட பல ஏரிகளின் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டன.
ஏரி, குளம் உள்ள நிலப்பரப்பை ஆக்கிரமித்து, கொட்டகை அமைத்திருப்பது; குடியிருப்புகளின் சுற்றுசுவர் கட்டியிருப்பது மற்றும் சிறிய வியாபாரங்களுக்கான இடமாக மாற்றியிருந்ததையும் அகற்ற வேண்டியிருந்தது. ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த, அங்குள்ள மக்களிடம் போராட வேண்டியிருந்தது. இந்த இடத்தை வாங்குவதற்கு லட்ச கணக்கில் செலவிட்டதாக அவர்கள் கூறினர். இன்னும், 4,500 ஏக்கர் நிலப்பரப்புள்ள, 837 நீர்நிலைகளில் ஆய்வு நடத்த வேண்டியுள்ளது. இவ்வாறு வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X