கடத்தப்பட்ட 6 வயது குழந்தை மீட்பு: பெண் கைது

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பெங்களூரு: பெங்களூரு அருகே ஆறு வயது பெண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.ஹுப்பள்ளி ராமலிங்கேஸ்வர் நகரைச் சேர்ந்தவர் ஷப்னம் கதக்கர், 19. அண்டை வீட்டில் வசிக்கும் இவரது துாரத்து உறவினர் அஸ்லம் பல்லாரி மற்றும் பக்கத்து வீட்டினருடனும் நன்றாக பழகி வந்தார். இதனால் அஸ்லமின் ஆறு வயது பெண் குழந்தை, ஷப்னத்துடன் பாசத்துடன் பழகி வந்தது.இந்நிலையில், கடந்த

பெங்களூரு: பெங்களூரு அருகே ஆறு வயது பெண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
ஹுப்பள்ளி ராமலிங்கேஸ்வர் நகரைச் சேர்ந்தவர் ஷப்னம் கதக்கர், 19. அண்டை வீட்டில் வசிக்கும் இவரது துாரத்து உறவினர் அஸ்லம் பல்லாரி மற்றும் பக்கத்து வீட்டினருடனும் நன்றாக பழகி வந்தார். இதனால் அஸ்லமின் ஆறு வயது பெண் குழந்தை, ஷப்னத்துடன் பாசத்துடன் பழகி வந்தது.
இந்நிலையில், கடந்த ஜூலை 31ல், ஆறு வயது குழந்தையை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டு, மாலை வீடு திரும்புவதாக, அஸ்லம் பல்லாரியிடம், ஷப்னம் கூறியுள்ளார். அவரும் சரி என்று ஒப்புக் கொண்டார். ஆனால் இரவு நெடுநேரமாகியும் இருவரும் வரவில்லை, ஷப்னமுக்கு போன் செய்தால், போனை எடுக்கவுமில்லை. அவரின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டும், தகவல் கிடைக்காததால், மறுநாள் காலை வரை காத்திருந்தனர்.


புகார்


அப்போதும் வராததால், கோகுல் சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரை பதிவு செய்த போலீசார், உடனடியாக ஷப்னம், போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் எடுக்கவில்லை. அவரின் போனை, 'டிராக்' செய்த போது, பெங்களூரில் இருப்பது தெரியவந்தது. அத்துடன் அவரின் மொபைல் போனிலிருந்து, மற்றொரு எண்ணுக்கு அடிக்கடி பேசுவது தெரியவந்தது.
அந்த நம்பரை பரிசீலித்த போது, மாண்டியாவில் இருக்கும் ஷப்னமின் ஆண் நண்பர் ஒருவருடையது தெரிந்தது. ஆண் நண்பருக்கும், ஷப்னமுக்கும் ஹுப்பள்ளியில் இருக்கும்போதே 'தொடர்பு' ஏற்பட்டது. ஆண் நண்பரை தொடர்பு கொண்ட போலீசார், விஷயத்தை கூறினர். இது எதுவும் தெரியாத அவர், போலீசாருக்கு உதவ முன்வந்தார்.
ஷப்னமை தொடர்பு கொண்ட அவர், மெஜஸ்டிக் பஸ் நிலையம் ஆறாவது பிளாட் பாரத்துக்கு வருமாறு கூறினார். உடனே, பெங்களூரு போலீசை தொடர்பு கொண்ட கோகுல் சாலை போலீசார், விஷயத்தை கூறினர். மப்டியில் இருந்த போலீசார், குழந்தையுடன் அங்கு வந்த ஷப்னமை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X