கிறிஸ்தவர்கள் ஜெபத்தால் தான் தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது: அமைச்சர் நாசர் பேச்சு

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (339) | |
Advertisement
திருவள்ளூர் : ''கிறிஸ்தவ மக்களின் வலிமையான ஜெபத்தால் தான், தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது,'' என, பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேசினார்.திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள, அற்புத ஜெபகோபுரம் ஏ.ஜி., தேவாலயத்தின், 40ம் ஆண்டு துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேசியதாவது:முன்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள்,
DMK, Nasar, Christian, Minister

திருவள்ளூர் : ''கிறிஸ்தவ மக்களின் வலிமையான ஜெபத்தால் தான், தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது,'' என, பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேசினார்.

திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள, அற்புத ஜெபகோபுரம் ஏ.ஜி., தேவாலயத்தின், 40ம் ஆண்டு துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேசியதாவது:

முன்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள், சிறுபான்மையினர் நலன் கருதி, பல்வேறு சீரிய திட்டங்களை கொண்டு வந்தனர். சிறுபான்மைருக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில் ஆட்சி செய்தனர். ஆனால், தற்போதைய மத்திய அரசின் ஏழு ஆண்டு கால ஆட்சியில், சிறுபான்மையினருக்கு பல்வேறு சோதனைகள் ஏற்பட்டுள்ளன.

கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால் தான், தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளதாக பால்வள அமைச்சர் நாசர் கூறியுள்ளார். பாஜகவுக்கு முன்பு ஆட்சி செய்தவர்கள், சிறுபான்மையினர் நலன் கருதி, பல்வேறு சீரிய திட்டங்களை கொண்டு வந்தனர். தற்போதைய மத்திய அரசின் ஏழு ஆண்டு கால ஆட்சியில், சிறுபான்மையினருக்கு பல்வேறு சோதனைகள் ஏற்பட்டுள்ளன என்றார்.


latest tamil news


இதே ஜெபகூட்டத்தில் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என, மூவரும் உள்ளோம். இதுவே மத நல்லிணக்கம்; மத ஒற்றுமை. நம்நாட்டில் உள்ளவர்கள் பல்வேறு மொழிகள், மதங்களை சார்ந்து இருந்தாலும், அவர்களுக்குள் வேற்றுமை இல்லாமல் பழகி வருவதால், இந்தியாவை யாராலும் பிளவுபடுத்த முடியாது. கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால் தான், இன்று மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (339)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ
08-ஆக-202119:18:33 IST Report Abuse
Jit Onet தமிழர்கள் முட்டாள்கள், பழம்பெருமை மட்டுமே பேசும் வடிகட்டின அசடுகள். ஏதோ அறுபது வருடங்களுக்கு முன்னால் வந்த அரசுகள் செய்த நன்மைகளினால் இன்னும் வண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
08-ஆக-202114:54:26 IST Report Abuse
venkates ஜெபிக்க நல்லது, மந்திரமான தீமை
Rate this:
Cancel
Mayuram Swaminathan - Chennai,இந்தியா
07-ஆக-202113:23:25 IST Report Abuse
Mayuram Swaminathan ஒரு அமைச்சர் இந்த மாதிரியாக பேசுவது கண்டிக்கத்தக்கது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X