பில் கேட்ஸ் - மெலிண்டா சட்டப்படி பிரிந்தனர்

Added : ஆக 04, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த 'மைக்ரோசாப்ட்' நிறுவனர் பில்கேட்ஸ் - மெலிண்டா தம்பதி சட்டப்படிவிவாகரத்து பெற்று பிரிந்தனர்.அமெரிக்காவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் நிறுவனர் பில்கேட்ஸ், 65. இவரது மனைவி மெலிண்டா, 56. கடந்த 27 ஆண்டுகளாக கணவன் - மனைவியாக வாழ்ந்த இவர்கள், மே மாதம் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர். 90 நாட்கள்
Bill Gates, Melinda, divorced

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த 'மைக்ரோசாப்ட்' நிறுவனர் பில்கேட்ஸ் - மெலிண்டா தம்பதி சட்டப்படிவிவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் நிறுவனர் பில்கேட்ஸ், 65. இவரது மனைவி மெலிண்டா, 56. கடந்த 27 ஆண்டுகளாக கணவன் - மனைவியாக வாழ்ந்த இவர்கள், மே மாதம் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர். 90 நாட்கள் காத்திருப்பு காலத்திற்குப் பின் வாஷிங்டன் மாகாண கிங் நகர நீதிமன்றம் இவர்களுக்கு சட்டப்படி விவகாரத்து வழங்கியது.


latest tamil news


வாஷிங்டன் சட்டப்படி தம்பதியின் சொத்துக்கள் விவாகரத்திற்குப் பின் சரிசமமாக இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். தங்கள் விருப்பப்படி சொத்துக்களை பிரித்துக் கொள்வதாக தம்பதியர் தெரிவித்தால் அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும். பில்கேட்சும், மெலிண்டாவும் தங்களுக்குள் சொத்துக்களை பிரித்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதனால் சொத்து பிரிப்பு விபரம் தெரியவில்லை.

விவாகரத்து அறிவிப்பின் போது பில்கேட்சின் சொத்து மதிப்பு 10 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இதில் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் மெலிண்டா பெயருக்கு மாற்றப்பட்டன. விவாகரத்து பெற்றாலும், பில் - மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் ஒன்றாக செயல்பட உள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
04-ஆக-202109:38:35 IST Report Abuse
Muguntharajan ஏன் பிரிந்தார்கள்? என்ன பிரச்சனை? அத எவனும் சொல்ல மாட்டேங்கறாங்க. சும்மா பிரிஞ்சிட்டாங்க..பிரிஞ்சிட்டாங்க ன்னு ஓட்ட ரெக்கார்டு மாதிரி சொன்னதையே சொல்லிகிட்டு இருக்காங்க
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-ஆக-202108:32:11 IST Report Abuse
Kasimani Baskaran வெள்ளைக்காரர்கள் ஒரு பெண்ணுடன் உருப்படியாக குப்பைகொட்டுவது அவ்வளவு சுலபமில்லை. பத்து வருடத்துக்கு ஒரு முறையாவது புதுப்பித்து விடுவார்கள். பிள்ளைகள், குடும்பம் என்று அவ்வளவாக கவலைப்படுவது கிடையாது. 18 வயது வந்துவிட்டால் ஒரு சிலரே பிள்ளைகளின் கல்விக்கு உதவுவார்கள். மூதாதையர்கள் சொத்தில் வாழ்பவர்கள் குறைவே. பெரும் பணக்காரர்கள் கூட சொத்துக்களை தானம் செய்துவிட்டு தன் காலிலேயே நிற்பதை பல முறை பார்த்திருக்கிறேன்.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
04-ஆக-202106:32:18 IST Report Abuse
Sanny அண்ணன் இனி தனிக்காட்டு ராஜா,இவரின் ஒரு நண்பர் ஜெயிலில் இருந்தே தூக்கில் தொங்கினாராம், இவர் எப்படியோ? எப்பவுமே ஒரு ஆணின் முன்னேற்றத்துக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள், அதையும் கைகழுவி விட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X