கேரள எல்லையில் கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
மங்களூரு: கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதையடுத்து கேரளா எல்லையில், கூடுதல் டி.ஜி.பி., பிரதாப்ரெட்டி, திடீரென ஆய்வு மேற்கொண்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், கர்நாடக எல்லைகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் தலப்பாடி சோதனைச்சாவடியில்,

மங்களூரு: கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதையடுத்து கேரளா எல்லையில், கூடுதல் டி.ஜி.பி., பிரதாப்ரெட்டி, திடீரென ஆய்வு மேற்கொண்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், கர்நாடக எல்லைகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் தலப்பாடி சோதனைச்சாவடியில், கேரளாவிலிருந்து வருவோரிடம், கொரோனா நெகடிவ் சான்றிதழ், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் இருக்கிறதா? என்று ஆய்வு செய்யப்படுகிறது.
மங்களூரிலிருந்து, தலப்பாடி வழியாக கேரளா செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிகாரிகள் சரியாக சோதனை செய்வதில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, கூடுதல் டி.ஜி.பி., பிரதாப்ரெட்டி, திடீரென கேரளா எல்லையில் ஆய்வு மேற்கொண்டார். சான்றிதழ் கொண்டு வராதவர்களை எந்த காரணத்தை கொண்டும் கர்நாடகாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.
அதே வேளையில், ஆம்புலன்ஸ் உட்பட அவசரத் தேவைக்கு அனுமதியளிக்கும்படியும், மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் ஆகியோருக்கு அறிவுறுத்தினார். இதற்கிடையில், பஸ் போக்குவரத்து நிறுத்தியதைக் கண்டித்து, இடது சாரிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X