பொது செய்தி

இந்தியா

வனப்பகுதியில் சவாரி செல்ல கொரோனா சான்றிதழ் கட்டாயம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
சாம்ராஜ் நகர்: பண்டிப்பூர், கெம்மனகுந்தி வனப்பகுதியில் சவாரி செல்ல 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.பண்டிப்பூர், கெம்மனகுந்தி வனப்பகுதியில் தினமும் சுற்றுலாப்பயணியர் சவாரி அழைத்துச் செல்லப்படுவர். தற்போது கொரோனா அச்சுறுத்தலால், சவாரி செல்ல விரும்புவோருக்கு, 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட

சாம்ராஜ் நகர்: பண்டிப்பூர், கெம்மனகுந்தி வனப்பகுதியில் சவாரி செல்ல 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பண்டிப்பூர், கெம்மனகுந்தி வனப்பகுதியில் தினமும் சுற்றுலாப்பயணியர் சவாரி அழைத்துச் செல்லப்படுவர். தற்போது கொரோனா அச்சுறுத்தலால், சவாரி செல்ல விரும்புவோருக்கு, 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தனியார் சொகுசு விடுதிகள், ஹோம் ஸ்டே, லாட்ஜ்கள், வனத்துறை தங்கும் விடுதிகளில் தங்குவதற்கும், அந்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இதற்கிடையில், சாம்ராஜ்நகரின் சிவனசமுத்திரா, தமிழகத்தில் உள்ள ஒகேனக்கல் அருவிக்கு கர்நாடகா வழியாக செல்ல, வார இறுதி நாட்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று பரவல் கட்டுப்படுத்த வனத்துறை தீவிரமாக உள்ளது. இது போன்று மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலலங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X