பொது செய்தி

இந்தியா

சனி, ஞாயிறு முழு ஊரடங்கு?: மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பெங்களூரு: கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு நடத்த மாநகராட்சி அதிகாரிகள் யோசிக்கின்றனர். முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொரோனா மூன்றாம் அலை பீதியால், ஏற்கனவே உள்ள இரவு நேர ஊரடங்கை முறையாக அமல்படுத்த பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இரவு 10:00

பெங்களூரு: கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு நடத்த மாநகராட்சி அதிகாரிகள் யோசிக்கின்றனர். முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாம் அலை பீதியால், ஏற்கனவே உள்ள இரவு நேர ஊரடங்கை முறையாக அமல்படுத்த பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இரவு 10:00 மணியிலிருந்து, அடுத்த நாள் அதிகாலை 5:00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த வேளையில், அவசர தேவைக்குத் தவிர, மற்றவர்கள் வெளியே வர கூடாது.
ஆட்டோ, டாக்சி, கார்கள் நடமாட்டத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா விதிமுறைகள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். இரவு நேரங்களில் பணிக்குச் செல்வோர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயம்.
மாநகராட்சியின், எட்டு மண்டலங்களில், சிங்கசந்திரா, எலச்சனஹள்ளி, பேகூர், அரகெரே, பானஸ்வாடி, லிங்கராஜபுரா, ஜோகுபாளையம், மனோராயனபாளையா, விக்ஞானநகர், ஹூடி, கருடாச்சார்பாளையா, ராமமூர்த்திநகர், ஹெம்மிகேபுரா.லக்கரே, ஆர்.ஆர்.நகர், உல்லால், கோரமங்களா, விஜயநகரா, கிரிநகர், கணேஷ் மந்திரா, பசவனகுடி, அரண்மனை நகர், மாரப்பனபாளையா, பசவேஸ்வரநகர், ராஜ்மஹல் குட்டஹள்ளி, குவெம்புநகர், கெம்பேகவுடாநகர், தொட்ட பொம்மசந்திரா.அப்பிகெரே, நெலமஹேஸ்வரிநகர், தாசரஹள்ளி, எலஹங்கா ஆகிய 32 கட்டுப்பாட்டு பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அந்தப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு நடத்த மாநகராட்சி அதிகாரிகள் யோசிக்கின்றனர். இது குறித்து, முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்க தீர்மானித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X