ஆதரவற்றோருக்கு தடுப்பூசி; உயர்நீதிமன்றத்தில் தகவல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றோருக்கு தடுப்பூசி; உயர்நீதிமன்றத்தில் தகவல் 

Added : ஆக 04, 2021
Share
மதுரை : மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார்.உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரையில் ஆதரவற்றோர், வீடற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், பிச்சைக்காரர்கள் திரிகின்றனர். பட்டினியால் இறக்க நேரிடுகிறது. இவர்கள் மூலம் பிறருக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. இவர்களை சட்டப்படி மீட்க வேண்டும். உணவு, குடிநீர், தங்குமிடம் வசதி செய்து தர அரசுக்கு உத்தரவிட

மதுரை : மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார்.உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரையில் ஆதரவற்றோர், வீடற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், பிச்சைக்காரர்கள் திரிகின்றனர். பட்டினியால் இறக்க நேரிடுகிறது. இவர்கள் மூலம் பிறருக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. இவர்களை சட்டப்படி மீட்க வேண்டும். உணவு, குடிநீர், தங்குமிடம் வசதி செய்து தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.துரைசுவாமி, எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. மதுரை மாநகராட்சி தரப்பு,'ஆதரவற்றோர், பிச்சைக்காரர்கள் தங்க மையங்கள் உள்ளன. அவர்களுக்கு உணவளிக்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது,' என தெரிவித்தது. மாநகராட்சி கமிஷனர் செப்.,20 ல் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X