தமிழ்நாடு

பட்டதாரிகள் தொழில்கள் துவங்க, விரிவுபடுத்த வாய்ப்பு! தொழில் முதலீட்டு கழகம் வழங்குகிறது கடன்

Added : ஆக 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் பி.இ., பி.டெக், பி.பார்ம், கேட்டரிங் பட்டதாரிகள் தொழில் துவங்க, விரிவுபடுத்த, புதுமையான கண்டுபிடிப்பை செயல்படுத்த தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் பிணையமில்லா கடன் வழங்கப்படுகிறது.சிறு, குறுந்தொழில்களை அதிகரிக்க இக்கடன் வழங்கப்படுகிறது. கேட்டரிங் படித்தவர்கள் துறை சார்ந்த மூன்றாண்டு அனுபவம், டிப்ளமோ முடித்திருந்தால் ஆறாண்டு
பட்டதாரிகள் தொழில்கள் துவங்க, விரிவுபடுத்த வாய்ப்பு! தொழில் முதலீட்டு கழகம் வழங்குகிறது கடன்

மதுரை : மதுரை மாவட்டத்தில் பி.இ., பி.டெக், பி.பார்ம், கேட்டரிங் பட்டதாரிகள் தொழில் துவங்க, விரிவுபடுத்த, புதுமையான கண்டுபிடிப்பை செயல்படுத்த தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் பிணையமில்லா கடன் வழங்கப்படுகிறது.

சிறு, குறுந்தொழில்களை அதிகரிக்க இக்கடன் வழங்கப்படுகிறது. கேட்டரிங் படித்தவர்கள் துறை சார்ந்த மூன்றாண்டு அனுபவம், டிப்ளமோ முடித்திருந்தால் ஆறாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ரூ.50 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.3 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது.

தொழில் முதலீட்டு கழக மண்டல மேலாளர் ஆனந்தன், கிளை மேலாளர் கண்ணன் கூறியதாவது: கடன் தொகையில் 25 சதவீதம் தொழில் துவங்குபவர்கள் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் ஏழாண்டுக்குள் கடனை திரும்பி செலுத்த வேண்டும். கடனை அடைக்கும் வரை தமிழக அரசின் 6 சதவீதம் வட்டி சலுகை, தொழில் துவங்கிய முதல் மூன்றாண்டுகளுக்கு மின்கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை வழங்கப்படும்.

புதிய தொழில்நுட்பங்களுக்கு, அதிகாரிகள் குழுவினர் பரிந்துரையின் பேரில் பிணையமில்லா கடன் வழங்கப்படும், என்றனர். மேலும் விவரங்களுக்கு முதலீட்டு கழக திட்ட மேலாளர் ராஜாவை 87780 40572 ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
04-ஆக-202105:14:57 IST Report Abuse
Manian இதை நம்பி ஏமாந்தவன், மாமூல் விவரத்துக்கு ராவிலே பூனை மொக மூடி போட்டு, கருப்பு பர்தா அணிந்து மேற்கு வாசல் இடது புறம் நிற்க வேண்டும் அப்போது தொகை ஓதப்படும். சொல்பவர் வானத்தில் உள்ள பரம பிதாவே என்று ஜெபிப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X