பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு நாளில் 6 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஜெனரேட் பிளான்ஸ் திட்டம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
மதுரை : ''கொரோனா 3வது அலையை சமாளிக்க ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாதவாறு ஒரு நாளைக்கு 6 டன் உற்பத்தி செய்ய ஜெனரேட் பிளான்ஸ் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது,'' என, மதுரையில் உலக தாய்ப்பால் வார விழாவில் விழப்புணர்வு பிரசார வாகனத்தை துவக்கி வைத்து கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தாய்ப்பால் வார விழா ஆக.,7 வரை நடக்கிறது. தாய்ப்பாலின் அவசியம் குறித்து

மதுரை : ''கொரோனா 3வது அலையை சமாளிக்க ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாதவாறு ஒரு நாளைக்கு 6 டன் உற்பத்தி செய்ய ஜெனரேட் பிளான்ஸ் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது,'' என, மதுரையில் உலக தாய்ப்பால் வார விழாவில் விழப்புணர்வு பிரசார வாகனத்தை துவக்கி வைத்து கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தாய்ப்பால் வார விழா ஆக.,7 வரை நடக்கிறது. தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கொரோனா தொற்றை தவிர்க்க மக்கள் கூடுவதை தவிர்க்க வருவாய், மாநகராட்சி அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 20 க்கும் மேற்பட்ட குழுக்கள் மூலமும் மக்கள் கூடும் சந்தை, வணிகவளாகங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

ஒங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்ப்பாலின் அவசியத்தை விளக்கும் வரையப்பட்ட கோலங்கள், கண்காட்சியையும் கலெக்டர் பார்வையிட்டார். டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி, திட்ட அலுவலர் ெஹலன்ரோஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X