பொது செய்தி

தமிழ்நாடு

ஆமைவேகத்தில் ரோடு விரிவாக்க பணிகள்; நெருக்கடியில் தவிக்கும் வாகன ஓட்டிகள்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : நகரின் மையப்பகுதியான சர்ச் சந்திப்பில் ரோடு விரிவாக்க பணி துவங்கி பல நாட்கள் ஆகியும் இன்னும் முடிவடையாததால் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர் ஸ்ரீவில்லிபுத்துார் பொதுமக்கள்.மதுரை - -கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ரோடான இங்கு நாளுக்கு, நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வந்ததை தொடர்ந்து ரோட்டின் நான்குபுறமும் விரிவாக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார் : நகரின் மையப்பகுதியான சர்ச் சந்திப்பில் ரோடு விரிவாக்க பணி துவங்கி பல நாட்கள் ஆகியும் இன்னும் முடிவடையாததால் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர் ஸ்ரீவில்லிபுத்துார் பொதுமக்கள்.

மதுரை - -கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ரோடான இங்கு நாளுக்கு, நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வந்ததை தொடர்ந்து ரோட்டின் நான்குபுறமும் விரிவாக்கம் செய்யும் பணி ஜூன் மாதம் துவங்கியது. இதில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே பணி முடிவடைந்த நிலையில் இன்னும் மீதமுள்ள மூன்று பகுதிகளில் பணிகள் துவங்கவே இல்லை.ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதால் உள்ளூர் மக்கள் டூவீலர்களில் சிரமப்பட்டு செல்கின்றனர்.

மேலும் ஒரே பாதையில் நேர் எதிரே வாகனங்கள் இயக்கப்படுவதால் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. சந்திப்பின் மையப்பகுதியில் உள்ள போலீஸ் கூண்டு வெறும் காட்சி பொருளாக உள்ளது. வாகன ஓட்டிகளின் கண் பார்வையை மறைப்பதுடன் விபத்துக்கும் வழிவகுக்கிறது.ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது கடைகளின் படிகள் இடிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் இன்னும் சாக்கடை கட்டும் பணி துவங்கவில்லை. ஆகவே மாநில நெடுஞ்சாலைத்துறை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

ஊரடங்கில் செய்திருக்கலாம்

ஊரடங்கின் போது போக்குவரத்து இல்லாத நேரத்தில் இப்பணிகள் நடந்திருந்தால் பொதுமக்களுக்கு இடையூறு இருந்திருக்காது. தற்போது அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. விபத்து அபாயத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாரிமுத்து, கடை உரிமையாளர்.

தாமதத்தால் தவிப்பு

ரோடு விரிவாக்க பணி துவங்கி 60 நாட்கள் ஆகிவிட்டது. இப்பகுதி கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வர முடிவதில்லை. தொழில் பாதிப்பு ஏற்படுகிறது. அதிகாரிகள் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும்.-செல்வகுமார், வியாபாரி.

பதற்றத்துடன் பயணம்

வாகன நெரிசல், நேரெதிர் பயணம் என வாகன ஓட்டிகள் எப்போதும் ஒரு வித பதற்றத்துடனே இப்பகுதியை கடக்கின்றனர். முக்கிய ரோடு என்பதால் பணிகளை விரைந்து முடிந்தால் மக்களுக்கு சிரமம் குறையும்.-செல்வி, குடும்ப தலைவி.

விரைவில் பணிகள் முடிவடையும்

காலதாமதமின்றி பணிகள் செய்ய ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரோடு விரிவாக்க பணிகள் விரைவில் முடிவடையும்.-ஆனந்தகுமார், கோட்ட பொறியாளர், தேசிய நெடுஞ்சாலைத்துறை, ஸ்ரீவில்லிபுத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X