சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்//

Added : ஆக 04, 2021
Share
Advertisement
குடியால் தற்கொலைராஜபாளையம்: ராஜபாளையம் லட்சுமியாபுரம் தெருவை சேர்ந்த குருசாமி தேவர் மகன் கணேசன் 45, லோடுமேன் ஆக பணிபுரிந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் மனைவி குடும்பத்தை விட்டு பிரிந்த தகராறில் வீட்டின் மாடியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.வீட்டில் பட்டாசு தயாரித்த இருவர் கைதுசாத்துார்:

குடியால் தற்கொலை

ராஜபாளையம்: ராஜபாளையம் லட்சுமியாபுரம் தெருவை சேர்ந்த குருசாமி தேவர் மகன் கணேசன் 45, லோடுமேன் ஆக பணிபுரிந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் மனைவி குடும்பத்தை விட்டு பிரிந்த தகராறில் வீட்டின் மாடியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

வீட்டில் பட்டாசு தயாரித்த இருவர் கைது

சாத்துார்: தாயில்பட்டி கலைஞர் காலனியில் செல்வராஜ் என்பவர் தனது வீட்டில் வைத்து பட்டாசு தொழிலாளர்கள் அய்யம்மாள்(எ) மேரி 40, பிரின்ஸ் 19, ஆகியோரை கொண்டு லட்சுமி வெடி தயாரித்துள்ளார். வீட்டில் இருந்து பட்டாசு கருந்திரி, கத்தி, லட்சுமிவெடிகள், மூலப்பொருட்கள், தராசு, எடைக்கல் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொழிலாளர்கள் இருவரை போலீசார் கைது செய்து தலைமறைவான செல்வராஜை தேடி வருகின்றனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா வைத்திருந்தவர் கைது

ராஜபாளையம்: ராஜபாளையம் முடங்கியார் ரோடு அம்பேத்கர் நகர் பின் பகுதியில் வடக்கு போலீஸ் எஸ்.ஐ., டேவிட் ஸ்டீபன் சோதனை மேற்கொண்டார். இதில் தனியார் நார் கம்பெனி அருகே சீனிவாசன் புது தெருவை சேர்ந்த பொன்னுச்சாமி 52, கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் கைது செய்தனர்.

கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

விருதுநகர்: விழுப்புரம் மாவட்டம் குச்சிபாளையத்தை சேர்ந்த ஜோதி 50. இவர் குடும்பத்துடன் விருதுநகர் கருப்பசாமி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். கிணற்றுக்கு குளிக்க சென்றவர் தவறி விழுந்து பலியானார். அவர் மகன் ராஜா அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X