பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை போலீசார் அலைக்கழிப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : விபத்தில் சிக்கிய சிவகங்கை போலீசாருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஊழியர்கள் எக்ஸ்ரே எடுக்க மறுத்ததால் அலைக்கழிக்கப்பட்டனர்ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான போலீஸ் உடல் தகுதி தேர்வு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகிறது. தேர்வு பாதுகாப்பு பணிக்கு வந்த சிவகங்கை மாவட்டம்

ராமநாதபுரம் : விபத்தில் சிக்கிய சிவகங்கை போலீசாருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஊழியர்கள் எக்ஸ்ரே எடுக்க மறுத்ததால் அலைக்கழிக்கப்பட்டனர்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான போலீஸ் உடல் தகுதி தேர்வு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகிறது. தேர்வு பாதுகாப்பு பணிக்கு வந்த சிவகங்கை மாவட்டம் நல்லேந்தலைச் சேர்ந்த போலீசார்ஜெயபால் 31, அரியநாச்சியார் குடியிருப்பு மாணிக்கவேல் 35 வந்துஇருந்தனர்.இருவரும் நேற்று அதிகாலை டூவீலரில் பணிக்கு சென்றனர். மைதானம் அருகே சென்ற போது நாய் குறுக்கே வந்ததால் மோதி கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு இருவருக்கும் எக்ஸ்ரே எடுக்க வேண்டும், என்ற நிலையில் பணி முடிந்துவிட்டதாக ஊழியர்கள் வெளியேறினர். காலை 8:00 மணி வரை பணி இருந்த நிலையில் காலை 6:40 மணிக்கு பணியில் இருந்த எலும்புமுறிவு டாக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

டாக்டர் கூறிய பிறகே போலீசாருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.போலீசார்இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் அலைக்கழிக்கப்பட்டனர். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X