தமிழ்நாடு

மீனவர்கள் சிரமம்! தூண்டில் வளைவு பாலம் தான் தீர்வு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் துறைமுகத்தில் படகுகள் நிறுத்த போதிய இடவசதி இன்றியும், பாம்பனில் ரூ.70 கோடியில் அமைக்கப்பட்ட துறைமுகம் பயன்பாடில்லாமல் உள்ளதால் மீனவர்கள் சிரமப்படுகின்றனர்.தமிழகத்தில் பெரிய மீன்பிடி துறைமுகம் ராமேஸ்வரம் பகுதி தான்.இங்கு 1500 விசை,600 நாட்டுப்படகுகள், 50 ஆயிரத்திற்கும் மேலான மீனவர்கள், மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் உள்ளனர். இங்குள்ள மீனவர்கள் எல்லை தாண்டி
மீனவர்கள் சிரமம்! தூண்டில் வளைவு பாலம் தான் தீர்வு

ராமேஸ்வரம் துறைமுகத்தில் படகுகள் நிறுத்த போதிய இடவசதி இன்றியும், பாம்பனில் ரூ.70 கோடியில் அமைக்கப்பட்ட துறைமுகம் பயன்பாடில்லாமல் உள்ளதால் மீனவர்கள் சிரமப்படுகின்றனர்.

தமிழகத்தில் பெரிய மீன்பிடி துறைமுகம் ராமேஸ்வரம் பகுதி தான்.இங்கு 1500 விசை,600 நாட்டுப்படகுகள், 50 ஆயிரத்திற்கும் மேலான மீனவர்கள், மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் உள்ளனர். இங்குள்ள மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை பகுதிக்குள் மீன்பிடிக்க செல்வதால்,அந்நாடு கடற்படை வீரர்களால் தாக்குதலுக்கு ஆளாகி படகு, வலைகள் சேதமாகிறது.

இதனை தவிர்க்க, ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க பாம்பன் குந்துகால் கடற்கரையில் ரூ.70 கோடியில் மத்திய,மாநில அரசு மீன்பிடி துறைமுகம் அமைத்தது.இங்கு 200 படகுகள் நிறுத்த வசதியும், ஆழ்கடலில் சிக்கும் சூரை, சீலா, வாவல் உள்ளிட்ட உயர்ரக மீன்களை பதப்படுத்திட குளிர்சாதன அறையும் உள்ளது. துவக்கத்தில் இங்கு ஆழ்கடல் விசைப்படகுகள், நாட்டுபடகுகளை மீனவர்கள் நிறுத்தி மீன்களை இறக்கியும்,வலைகளை சரி செய்து மீண்டும் மீன்பிடிக்க சென்றனர்.

பாம்பனில் நோ யூஸ்மன்னார் வளைகுடா கடலில் அவ்வப்போது எழும் ராட்சத அலைகள் பாம்பன் குந்துகாலில் உள்ள புதிய துறைமுகத்திற்குள் (படகுகள் நிறுத்தும் பகுதியில்) புகுவதால், இங்கு நிறுத்தப்பட்டுள்ள ஆழ்கடல் படகுகள், விசை, நாட்டுபடகுகள் சேதமடைந்து விடுகிறது. இதனால் சமீபகாலமாக இங்கு படகுகளை மீனவர்கள் நிறுத்தாமல், பலத்த காற்று வீசும் காலங்களில் சின்னபாலம் கடலோரத்தில்படகுகளை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.

2019, 2020ல் வீசிய புயலில் 50 க்கு மேலான ஆழ்கடல் படகுகள் மற்றும்விசைப்படகுகள் சேதமடைந்ததால் தற்போது குந்துகால் துறைமுகம், சின்னபாலம் கடலோரத்தில் படகுகளை நிறுத்த மீனவர்கள் முன்வருவதில்லை.நெருக்கடி 1975ல் ராமேஸ்வரத்தில்20 படகிற்கு ஏற்ப அமைத்த மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மீன்களை இறக்கி, படகை பராமரித்தனர். ஆனால் தற்போது 800 விசைப்படகுகள் இருப்பதால் அவற்றை துறைமுகத்தில் நிறுத்தி இன்ஜின் பழுது, படகு மராமத்து செய்ய முடியாத நிலை உள்ளது.


மீறி நிறுத்தும் படகுகள்


நெருக்கடியில் ஒன்றோடு ஒன்றாக மோதி சேதமடைவதால் செலவீனம் ஏற்படுகிறது. தற்போது இந்த துறைமுகத்தில் பல துாணில் விரிசல் ஏற்பட்டுஉள்ளதால் எப்போது இடிந்து விழுமோ என பீதியில் மீனவர்கள் வலைகள், மீன்களை இறக்கி செல்கின்றனர்.மீனவர்கள் ரெடிஅரசு ரெடியாராமேஸ்வரத்தில் உள்ள 500க்கும் மேலான விசைப்படகுகளில் நுாறுக்கு மேலான மீனவர்கள், பாம்பன் குந்துகால், சாயல்குடி மூக்கையூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்ல தயாராக உள்ளனர். ஆனால் ரூ.114 கோடி செலவில் அமைத்த மூக்கையூர் துறைமுகத்திலும் முழுமையாக படகை நிறுத்த முடியாத நிலை தான் உள்ளது.


காவு வாங்கும் பாலம்


ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் என்.ஜே.போஸ் கூறுகையில், 45 ஆண்டுகளுக்கு முன் ராமேஸ்வரத்தில் 20 படகுகள் மட்டுமே இருந்தது, அதனை கருத்திற் கொண்டு அமைத்த துறைமுகத்தில், தற்போது பயன்பாட்டில் உள்ள 800 படகுகளை நிறுத்தி மீன்களை இறக்க, படகை பாதுகாக்க வசதியில்லை.இப்பாலத்தை பராமரிக்க மீன்துறை முன்வராததால் துாண்கள், சாலை சேதமடைந்து 'தொங்கு பாலம்' போல் மீனவர்கள்உயிரை காவு வாங்க துடிக்கும் பாலமாக மாறி உள்ளது. மழை, புயல் வீசும் நாட்களில் இங்கு படகுகளை நிறுத்தமுடியாத அவலம் உள்ளது. ராமேஸ்வரத்தில் துாண்டில் வளைவுடன் துறைமுகத்தை விரிவுபடுத்திடவும், பாம்பன் குந்துகாலில் துாண்டில் வளைவு பாலம் அமைத்தால் படகுகளை நிறுத்தி, ஆழ்கடலில் மீன்பிடித்து கரை திரும்ப முடியும்,என்றார்.


வாழ்க்கை வாழநிரந்தர தீர்வு


ராமேஸ்வரம் மீனவர் சங்க செயலர் சகாயம் கூறுகையில், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த நிலையில், தற்போது இலங்கை கெடுபிடியால் குடும்ப செலவுக்கு கூட வருவாய் இன்றி தவிக்கிறோம். பல நாட்களாக மீன்பிடிக்க முடியாத நிலை உள்ளதால், எங்களது குடும்பத்தினர் பட்டினியில் வாடுகின்றனர்.பிழைப்பு தேடி பாம்பன்,மூக்கையூரில் தங்கி மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் தயாராக உள்ளனர்.

ஆனால் மூக்கையூர் துறைமுகத்தில்படகுகளை நிறுத்திட கட்டமைப்பு வசதி, துாண்டில் வளைவு பாலம் இல்லாததால் இங்கு படகிற்கு உத்தரவாதம் இல்லாத அவலம் உள்ளது. நாடோடியாக வாழும் எங்களது வாழ்க்கைக்கு நிரந்தர தீர்வு காண முந்தைய அரசிடம் முறையிட்டும், கண்டுகொள்ளவில்லை. பாம்பனில் துாண்டி வளைவு பாலம், மூக்கையூரில் படகுகள் நிறுத்தும் பகுதி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X