பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் விரிவாக்க மையத்தில் 34 டன்  விதை நெல்  கையிருப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் விவசாயிகள் விரும்பிய ரகங்களின் நெல்விதைகள் 34 டன் வேளாண் விரிவாக்க மையத்தில் தயார் நிலையில் உள்ளது. ராமநாதபுரம் பகுதியில் 7200 எக்டேரில் நெல்சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் பி.பி.டி., 5204, என்.எல்.ஆர்., 34449, ஆர்.என்.ஆர்.,15048 ஆகிய நெல்ரகங்களை அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். இவர்களின் தேவையை அறிந்து ராமநாதபுரம் வேளாண் விரிவாக்க மையத்தில்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் விவசாயிகள் விரும்பிய ரகங்களின் நெல்விதைகள் 34 டன் வேளாண் விரிவாக்க மையத்தில் தயார் நிலையில் உள்ளது.

ராமநாதபுரம் பகுதியில் 7200 எக்டேரில் நெல்சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் பி.பி.டி., 5204, என்.எல்.ஆர்., 34449, ஆர்.என்.ஆர்.,15048 ஆகிய நெல்ரகங்களை அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். இவர்களின் தேவையை அறிந்து ராமநாதபுரம் வேளாண் விரிவாக்க மையத்தில் நடப்பு சம்பா சாகுபடிக்கு தேவையான சான்று பெற்ற மேற்கண்ட ரகங்களுடன் சி.ஓ.,41 டி.கே.எம். 13 ரக நெல்விதைகள் 34 டன் வரை இருப்புள்ளது. இவை குறுகிய கால மற்றும் மத்திய காலம் மற்றும் மானாவாரி சாகுடிக்கு ஏற்ற ரகங்களாகும்.

தொழில்நுட்பங்களை பின்பற்றினால் அதிக மகசூல் பெறலாம். நெல்விதைகள் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், விதைக்கிராம திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும். மேலும் உயிர் உரங்கள் வழங்கப்படும். தேவையுள்ள விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என வேளாண் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X