பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.எஸ்.மங்கலத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : மாவட்டத்தில், பல ஆண்டுகளுக்கு பிறகு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாக நிலவிய கடும் வறட்சி காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைந்து, குடிநீர் பற்றாக்குறை நிலவியது. குறிப்பாக ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த நிலை கிணறுகள், அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு, குடிநீர் பற்றாக்குறை நிலவியது.கடந்த ஆண்டு

ஆர்.எஸ்.மங்கலம் : மாவட்டத்தில், பல ஆண்டுகளுக்கு பிறகு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நிலவிய கடும் வறட்சி காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைந்து, குடிநீர் பற்றாக்குறை நிலவியது. குறிப்பாக ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த நிலை கிணறுகள், அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு, குடிநீர் பற்றாக்குறை நிலவியது.கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால், மாவட்டத்திலுள்ள ஏராளமான கண்மாய்களும், குளங்களும், நிரம்பின.

கோடை காலத்திலும், குளங்களில் தண்ணீர் வற்றாமல் உள்ளதால், மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, வீடுகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் ஊற்று அதிகரித்து தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுஉள்ளது. 150 முதல் 250 அடி வரை ஆழ்துளை கிணறு அமைத்தால், மட்டுமே தண்ணீர் கிடைத்து வந்த நிலையில் தற்போது ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 30 அடி முதல் 60 அடிக்குள் நல்ல தண்ணீர் கிடைக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X