தமிழ்நாடு

பூக்கள் விற்பனை இல்லாததால் விவசாயிகள் இழப்பு! கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை எதிரொலி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ஆடி கார்த்திகை, ஆடிப்பெருக்கு கோயில் விழாக்களை நம்பிவியாபாரிகள் பூக்களை வாங்கினர். கோயில்களில் பக்தர்கள்தரிசனம் ரத்து காரணமாக பூமாலைகள் விற்பனையின்றிதேக்கமடைந்ததால் ரூ. பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தேவிபட்டினம், உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி உள்ளிட்ட புகழ்பெற்ற ஆன்மிக தலங்கள் உள்ளன. கொரோனா பரவல் தடுப்பு
பூக்கள் விற்பனை இல்லாததால் விவசாயிகள் இழப்பு! கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை எதிரொலி

ராமநாதபுரம் : ஆடி கார்த்திகை, ஆடிப்பெருக்கு கோயில் விழாக்களை நம்பிவியாபாரிகள் பூக்களை வாங்கினர். கோயில்களில் பக்தர்கள்தரிசனம் ரத்து காரணமாக பூமாலைகள் விற்பனையின்றிதேக்கமடைந்ததால் ரூ. பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தேவிபட்டினம், உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி உள்ளிட்ட புகழ்பெற்ற ஆன்மிக தலங்கள் உள்ளன. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இவ்வாண்டு திடீரென ஆக., 1 முதல் 3 வரை முக்கிய கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டது. கிராம கோயில் விழாக்களும் பாதிக்கப்பட்டுஉள்ளது. எதிர்பார்த்த விற்பனையின்றி பூக்கள் தேக்கமடைந்துள்ளதால் வியாபாரிகள் இழப்பை சந்தித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு பூக்கட்டும் வியாபாரிகள் சங்கதலைவர் முருகன் கூறுகையில், 'ஆடி விழாவை முன்னிட்டு பூக்களை மொத்தமாக மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை பகுதியில்இருந்து வியாபாரிகள் வாங்கினர். தற்போது பக்தர்கள் தரிசனத்திற்கு தடையால் பூ வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 20 ஆயிரம் பேர் பூ விற்பனை செய்கின்றனர்.

ஊரடங்கால் பூ வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வாங்கிய கடனை கட்ட முடியாமல் சிரமப்படுகிறோம். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோயில்களில் வழக்கம்போல விழாக்கள்நடத்தவும், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். பூ வியாபாரிகளுக்கு அரசு இழப்பீட்டு தர வேண்டும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X