பொது செய்தி

தமிழ்நாடு

14 விசைப்படகு உரிமையாளர்கள்ஆஜராக துணை இயக்குனர் உத்தரவு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்த 14 விசைப்படகு உரிமையாளர்கள் நேரில் ஆஜராக மீன்வளத்துறை துணை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன்பிடித்த விசைப்படகு மீனவர்கள்தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. ரோந்து படகுகளில் ராமேஸ்வரம் உதவி இயக்குனர்

ராமநாதபுரம் : தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்த 14 விசைப்படகு உரிமையாளர்கள் நேரில் ஆஜராக மீன்வளத்துறை துணை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன்பிடித்த விசைப்படகு மீனவர்கள்தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. ரோந்து படகுகளில் ராமேஸ்வரம் உதவி இயக்குனர் அப்துல் தலைமையிலான அதிகாரிகள் சென்று படகுகளை சோதனையிட்டனர்.

இதில் 14 படகுகளில் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தது உறுதி செய்யப்பட்டது. மீன்வளத்துறை துணை இயக்குனர் இளம்வழுதிக்கு தெரிவிக்கப்பட்டது. துணை இயக்குனர் முன்னிலையில் நடைபெறும் விசாரணைக்கு வருமாறு படகு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை அடிப்படையில் படகில்பிடித்து வந்த மீன்களின் விலையில் 5 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும், என துணை இயக்குனர் இளம்வழுதி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X