சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பா.ம.க.,வினர் திரண்டதால் பரபரப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே டாஸ்மாக் கடை திறக்க பா.ம.க., வினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது .நடுவீரப்பட்டு-குறிஞ்சிப்பாடி மெயின்ரோட்டில் உள்ள ஆராய்ச்சிக்குப்பம் பகுதியில் 4 மாதங்களுக்கு முன் டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடை திறக்கவில்லை. அதிகாரிகள் உத்தரவின்

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே டாஸ்மாக் கடை திறக்க பா.ம.க., வினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
.நடுவீரப்பட்டு-குறிஞ்சிப்பாடி மெயின்ரோட்டில் உள்ள ஆராய்ச்சிக்குப்பம் பகுதியில் 4 மாதங்களுக்கு முன் டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடை திறக்கவில்லை. அதிகாரிகள் உத்தரவின் பேரில் டாஸ்மாக்கடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 11:00 மணிக்கு பா.ம.க., மாநில துணை பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநில இளைஞர் சங்க அமைப்பு செயலாளர் தட்சணாமூர்த்தி, மாநில இளைஞர் சங்க துணைத்தலைவர் மணி தலைமையில் 50 க்கும் மேற்பட்டவர்கள் கடை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த குவிந்தனர்.தகவலறிந்த டி.எஸ்.பி.,சபியுல்லா தலைமையில் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர், அண்ணாமலை உட்பட 50 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்த குவிந்தவர்களிடம் டி.எஸ்.பி., பேச்சு வார்த்தை நடத்தி, மாவட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து பா.ம.க.,வினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X