பொது செய்தி

தமிழ்நாடு

கிரைம் செய்திகள்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ஓவர் போதையில் ஒருவர் பலி புவனகிரி தாலுகா, மருதுார் வடகிருஷ்ணாபுரம், பள்ளிக்கூடத்தெரு அய்யப்பன். இவரது மகன் தமிழ்மணி,19; சமையல் உதவியாளராக வேலை செய்தார். கடந்த 1 ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் புதுச்சேரி அருகிலுள்ள தவளக்குப்பத்திற்கு சமையல் உதவியாளர் வேலைக்கு சென்றார். தவளக்குப்பத்தில் பஸ்சை விட்டு இறங்கி வேலைக்கு செல்லாமல் மது அருந்தி விட்டு அங்கேயே

ஓவர் போதையில் ஒருவர் பலி

புவனகிரி தாலுகா, மருதுார் வடகிருஷ்ணாபுரம், பள்ளிக்கூடத்தெரு அய்யப்பன். இவரது மகன் தமிழ்மணி,19; சமையல் உதவியாளராக வேலை செய்தார். கடந்த 1 ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் புதுச்சேரி அருகிலுள்ள தவளக்குப்பத்திற்கு சமையல் உதவியாளர் வேலைக்கு சென்றார். தவளக்குப்பத்தில் பஸ்சை விட்டு இறங்கி வேலைக்கு செல்லாமல் மது அருந்தி விட்டு அங்கேயே இருந்தனர். அதிகமாக போதையால் மயங்கிய தமிழ்மணியை ஆட்டோவில் நேற்று முன் தினம் வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீட்டில் இருந்தவர் நேற்று முன் தினம் மாலை இறந்தார். மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கொத்தனார் தற்கொலை

பண்ருட்டி ஜி.கே.மூப்பனார் நகரை சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் நாகராஜன்,28; கொத்தனார்; இவர் கடந்த மாதம் 27ம் தேதி குடித்துவிட்டு வந்ததை அவரது மனைவி ஜெயபிரதா,24; கண்டித்தார். இதனால் மனமுடைந்த நாகராஜன் எலிபேஸ்ட் சாப்பிட்டார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு இறந்தார். புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.சாராயம் விற்ற 3 பேர் கைது

முத்தாண்டிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தவசெல்வம் தலைமையிலான போலீசார் வீரசிங்கன்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு வீடுகளில் சாராயம் விற்ற தவக்களை என்றமாயகிருஷ்ணன்,37; ஞானசேகர்,47; ஞானவேல்,37; ஆகியோரை கைது செய்து 120 லிட்டர் சாராய ஊரல், 90 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X