இந்தியா

மது பாட்டில் வாங்க மறுத்த போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பாகூர், : மதுபாட்டில் வாங்க மறுத்த போலீஸ் ஏட்டு மற்றும் அவரது நண்பரை தாக்கிய தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர். பாகூர் அடுத்த குருவிநத்தம் பெரியார் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ், 36; கடலுார் முதுநகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.இவர், கடந்த 1ம் தேதி இரவு, நண்பர் பார்த்திபனுடன் கடலுாரிலிருந்து

பாகூர், : மதுபாட்டில் வாங்க மறுத்த போலீஸ் ஏட்டு மற்றும் அவரது நண்பரை தாக்கிய தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர். பாகூர் அடுத்த குருவிநத்தம் பெரியார் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ், 36; கடலுார் முதுநகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.இவர், கடந்த 1ம் தேதி இரவு, நண்பர் பார்த்திபனுடன் கடலுாரிலிருந்து மோட்டார் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.சோரியாங்குப்பம் மேம்பாலம் அருகே வந்த போது, அதே ஊரை சேர்ந்த மாரிமுத்து, பைக்கை நிறுத்தி, மதுபாட்டில் வேண்டுமா என கேட்டார். வேண்டாம் என மறுத்த கிருஷ்ண ராஜை, சரக்கு வாங்கிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார்.அங்கு வந்த மாரிமுத்துவின் மகன் மகேந்திரன் உள்ளிட்டோர் சேர்ந்து, கிருஷ்ணராஜ் மற்றும் பார்த்திபனை தடியால் தாக்கி, மொபைல் போனை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர்.தாக்குதலில் காயமடைந்த இருவரும், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.புகாரின் பேரில், மாரிமுத்து, அவரது மகன் மகேந்திரன் உள்ளிட்ட 4 பேர் மீது, பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X