தமிழ்நாடு

சீரமைக்கப்படுமா! 41 பள்ளிகளில் பழுதான உயர் ரக கணினி ஆய்வகங்கள்... ஆசிரியர்கள் பயிற்சி பெறுவதில் தொடரும் சிக்கல்

Added : ஆக 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் 41 அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர்ரக கணினி ஆய்வகத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் பராமரிப்பின்றி பழுதானதால் ஆசிரியர்கள் பயிற்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வி சார்ந்த தகவல்கள் ஆன் லைன் வாயிலாக நடக்கிறது. இதனால் ஆசிரியர்கள் கணினி பயன்படுத்த அடிப்படை பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
 சீரமைக்கப்படுமா! 41 பள்ளிகளில் பழுதான உயர் ரக கணினி ஆய்வகங்கள்... ஆசிரியர்கள் பயிற்சி பெறுவதில் தொடரும் சிக்கல்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் 41 அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர்ரக கணினி ஆய்வகத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் பராமரிப்பின்றி பழுதானதால் ஆசிரியர்கள் பயிற்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி சார்ந்த தகவல்கள் ஆன் லைன் வாயிலாக நடக்கிறது. இதனால் ஆசிரியர்கள் கணினி பயன்படுத்த அடிப்படை பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. இதற்காக மாவட்டம் வாரியாக அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கான கணினி பயிற்சி நேற்று முன்தினம் துவங்கியது.மாநிலம் முழுவதும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தி மாணவர்களுக்கு கணினி, மடிக்கணினி வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.

மாவட்டம் வாரியாக அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் உள்ள 246 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் கடந்த 2018ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 246 பள்ளிகளில் இருந்து தலா ஒரு ஆசிரியர் வீதம் 246 பேருக்கு சென்னையில் உள்ள உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் மூலமாக கணினி இயக்குவது குறித்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளின் வருகை பதிவேடு, நலத்திட்ட உதவி பெறுவோர் எண்ணிக்கை, அனைத்துத் தேர்வு தொடர்பான விவரங்கள், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தல், தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளை பள்ளி அலுவலக ஊழியர்கள் செய்கின்றனர். இப்பணிகளை மேற்கொள்வது குறித்து ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் கடலுார் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி, வேணு கோபாலபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என 205 பள்ளிகளில் நேற்று முன் தினம் பயிற்சி துவங்கியது.

மாவட்டத்தில் மீதமுள்ள 41 பள்ளிகளில் கணினி ஆய்வகங்களில் பேட்டரி, யூ.பி.எஸ்., என பல உபகரணங்கள் பழுதாகி இயங்காமல் உள்ளது. இதனால் அருகிலுள்ள பள்ளிகளில் இயங்கும் கணினி ஆய்வகங்களுக்கு பயிற்சிக்கு செல்ல வேண்டியுள்ளதால் ஆசிரியர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அடுத்த கட்டமாக முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ள நிலையில் பழுதான ஆய்வகங்களை சரி செய்ய கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஆக-202111:01:23 IST Report Abuse
Tgsoundarrajan Balu எப்படியும் உடனே போட போறதில்ல. அரைமணி பொறுத்து மெயில் அனுப்பி என்ன பிரயோஜனம் எந்த விமர்ர்சனம் எனக்கே தெரிதிவல்லை அப்படியும் உங்கள் முகப்பு போட்டொக்கள் அருமை வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
04-ஆக-202110:55:24 IST Report Abuse
Tgsoundarrajan Balu முதல்ல சுவரை சரி செய்யுங்கள் அப்பதானே சித்திரம் வரையை முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X