பொது செய்தி

தமிழ்நாடு

ஆமை வேகத்தில் நடக்கும் மேல்நிலை தொட்டி கட்டும் பணி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
தேனி : கொடுவிலார்பட்டியில் தேவையான குடிநீர் கிடைத்தும் மேல்நிலை தொட்டி கட்டும் பணி முடியாததால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.தேனி ஒன்றியம் கொடுவிலார்பட்டி ஊராட்சி யில் வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்க ரூ. ஒரு கோடி மதிப்பீட்டில் 'ஜல்ஜீவன் மிஷன்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தாடிச்சேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 2.10 லட்சம் லி. குடிநீர்

தேனி : கொடுவிலார்பட்டியில் தேவையான குடிநீர் கிடைத்தும் மேல்நிலை தொட்டி கட்டும் பணி முடியாததால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.

தேனி ஒன்றியம் கொடுவிலார்பட்டி ஊராட்சி யில் வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்க ரூ. ஒரு கோடி மதிப்பீட்டில் 'ஜல்ஜீவன் மிஷன்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தாடிச்சேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 2.10 லட்சம் லி. குடிநீர் வழங்கப்படுகிறது. ஊராட்சியில் உள்ள 6 குடிநீர் தொட்டிகளில் 1.60 லட்சம் லி. சேமிக்கும் வசதி உள்ளது. எஞ்சிய 50 ஆயிரம் லி. நீரை சேமிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

ஜல்ஜீவன் மிஷனில் ஒரு லட்சம் லி. கொள்ளளவு மேல்நிலைத் தொட்டி வயல்பட்டி ரோட்டில் ஒரு ஆண்டாக ஆமை வேகத்தில் நடக்கும் பணியால் பயன்பாட்டிற்கு வரவில்லை. குடிநீர் வினியோக குழாய் பதிக்கும் பணி 3, 8,9,10 ஆகிய வார்டுகளில் துவங்க வில்லை. சில வார்டுகளில் பள்ளங்கள் முறையாக மூடாமல் மக்கள் சிரமம் அடைகின்றனர். ஊராட்சியில் புதிய குடிநீர் இணைப்பு பெற தயாராக இருந்தும் திட்டம் நிறைவு பெறாததால் மக்கள் சிரமம் அடைகின்றனர். ஜல்ஜீவன்மிஷன் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X