கூடலுாரில் வீணான குடிநீர்| Dinamalar

கூடலுாரில் வீணான குடிநீர்

Added : ஆக 04, 2021
Share
கூடலூர் : கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறியது.லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, பண்ணைப்புரம், கோம்பை உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக தேக்கத் தொட்டி கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ளது. இதில் இருந்து நேற்று காலை 4

கூடலூர் : கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறியது.

லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, பண்ணைப்புரம், கோம்பை உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக தேக்கத் தொட்டி கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ளது. இதில் இருந்து நேற்று காலை 4 மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக வெளியேறி ரோட்டில் சென்றது.

குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறும்போது, ''மெயின் குழாய்களில் தண்ணீர் திறந்து விடும் போது 'ஏர் கேப்' சரி செய்வதற்காக குடிநீரை வெளியேற்ற வேண்டிய நிலை உள்ளது. ரோட்டில் செல்லாதவாறு மாற்று ஏற்பாடு செய்யப்படும்'' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X