பா.ஜ., அலுவலகத்தில் | Dinamalar

இந்தியா

பா.ஜ., அலுவலகத்தில்

Added : ஆக 04, 2021
Share
புதுச்சேரி : பா.ஜ., தலைமை அலுவலகத்தில், கட்சியினர் மற்றும் பொது மக்களிடம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றார். இதில், லிங்காரெட்டிபாளையத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயி களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என விவசாயிகள் மனு அளித்தனர்.மண்ணாடிப்பட்டு தொகுதி, கைக்கிலப்பட்டு கிராமத்தை சேர்ந்த மக்கள்

புதுச்சேரி : பா.ஜ., தலைமை அலுவலகத்தில், கட்சியினர் மற்றும் பொது மக்களிடம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றார்.

இதில், லிங்காரெட்டிபாளையத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயி களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என விவசாயிகள் மனு அளித்தனர்.மண்ணாடிப்பட்டு தொகுதி, கைக்கிலப்பட்டு கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்கள் ஊருக்கு பஸ் வசதி, தரமான சாலை, தெரு விளக்கு, குடிநீர், இலவச மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு மனு கொடுத்தனர்.அதிகாரிகளுடன் ஆலோசித்து, குறைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X