மக்களை தேடி மருத்துவம் திட்டம்: காட்டுமன்னார்கோவிலில் 5ல் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்களை தேடி மருத்துவம் திட்டம்: காட்டுமன்னார்கோவிலில் 5ல் துவக்கம்

Added : ஆக 04, 2021
Share
கடலுார் : மக்களை தேடி மருத்துவம் திட்டம் கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் வரும் 5ம் தேதி துவக்கப்படுகிறது. வீடு தேடி சென்று சிகிச்சை அளிக்கும் 'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டம் வரும் 5 ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்துகிறது. இத்திட்டம் குறித்து கடலுார் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், சர்க்கரை நோய், ரத்த

கடலுார் : மக்களை தேடி மருத்துவம் திட்டம் கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் வரும் 5ம் தேதி துவக்கப்படுகிறது.

வீடு தேடி சென்று சிகிச்சை அளிக்கும் 'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டம் வரும் 5 ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்துகிறது. இத்திட்டம் குறித்து கடலுார் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதித்து மற்றவர்களின் உதவியை நாடுவோருக்கு இத்திட்டத்தின் மூலம் மருந்து, மாத்திரைகள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படும்.

இதற்காக, மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் மருத்துவ வட்டாரம் தேர்வு செய்யப்பட்டு, வரும் 5 ம் தேதி துவக்கி வைக்கப்படுகிறது.இங்கு ஏற்கனவே, வீடு வீடாகச் சென்று எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 9,500 பேர் உள்ளனர். இது மேலும் உயர்ந்து 12 ஆயிரம் பேர் வரை பயனடைவர். இந்த வட்டாரத்தை சேர்ந்த கிராமங்களில் சுய உதவிக் குழு மூலமாக கூடுதலாக நியமிக்கப்பட்ட 24 கிராம சுகாதார செவிலியர்கள் 15 நாட்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கி கண்காணிப்பர்.

அடுத்த மூன்று மாதங்களில் மீதமுள்ள 12 வட்டாரங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வாகனம் ஒதுக்கீடு செய்து முடநீக்கியல் நிபுணர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மருந்து மாத்திரைக்காக ரூ. 8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது , என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X