இந்தியா

கொரோனாவால் இறந்தோருக்கு நிதியுதவி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி, : 'கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்' என அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. கொரோனா மூன்றாம் அலை சிறுவர்களை பாதிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில்,

புதுச்சேரி, : 'கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்' என அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. கொரோனா மூன்றாம் அலை சிறுவர்களை பாதிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறப்பதை தள்ளி வைத்துள்ள அமைச்சரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.மூன்றாம் அலையை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட், சுற்றுலா தலங்களை மூடப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு வருவதால் கேரளா, கர்நாடகாவில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு அதிகளவில் வருகின்றனர்.

இவர்களால் புதுச்சேரியில் கொரோனா தொற்று மற்றும் கேரளாவில் அதிவேகமாக பரவி வரும் ஜிகா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுலா என்ற பெயரில் வெளி மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு வருவதை முழுமையாக தடுக்க வேண்டும்.கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில், நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X