இந்தியா

அதிகார போட்டி இல்லை: முதல்வர் ரங்கசாமி பேச்சு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பாகூர், : 'காலியாக உள்ள அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்' என முதல்வர் ரங்கசாமி கூறினார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மணப்பட்டு வனத்துறை தோட்டத்தில் நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது;நமது மாநிலத்தில் நிறைய காலி இடங்கள் உள்ளன. இதில், 75 ஆயிரம் மரக்கன்றுகள் மட்டுமின்றி, பல லட்சக் கணக்கான மரங்களை நடுவோம். இதன் மூலமாக,

பாகூர், : 'காலியாக உள்ள அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்' என முதல்வர் ரங்கசாமி கூறினார்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மணப்பட்டு வனத்துறை தோட்டத்தில் நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது;நமது மாநிலத்தில் நிறைய காலி இடங்கள் உள்ளன. இதில், 75 ஆயிரம் மரக்கன்றுகள் மட்டுமின்றி, பல லட்சக் கணக்கான மரங்களை நடுவோம். இதன் மூலமாக, பசுமையான புதுச்சேரியை உருவாக்குவோம்.

வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்து, சுற்றுலா திட்டங்களை கொண்டு வருவோம். இதற்கு, உள்ளூர் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இங்கு, மீன்பிடி துறைமுக திட்டப் பணி கிடப்பில் உள்ளது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் அதனை செயல்படுத்துவது குறித்து அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.புதுச்சேரியை சிறந்த மாநிலமாக கொண்டு வர அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். புதுச்சேரி அரசில் அனைத்து காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தனியார் தொழிற்சாலைகள் கொண்டு வந்து வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதற்கான சூழலை இந்த அரசு உருவாக்கும்.

கடந்த ஆட்சியில், அதிகார போட்டி வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. அந்த நிலை இப்போது மாறி உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு என்னென்ன அதிகாரங்கள் தேவை என்பதை கவர்னர் நன்கு அறிவார்.கவர்னரின் முழு ஒத்துழைப்போடு, புதுச்சேரி மாநிலத்தை தொழில் வளம் மிக்க, பசுமையான மாநிலமாக கொண்டு வருவோம். இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X