தமிழ்நாடு

பள்ளி செல்லாத மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு! திண்டுக்கல்லில் ஆக.10 முதல் 31 வரை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லாத 6 முதல் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் குறித்து ஆக.10 முதல் ஆக.31 வரை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.பதினெட்டு வயதிற்கு உட்பட்ட அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கல்வி உதவித்தொகை உட்பட பல்வேறு உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. இருப்பினும் வறுமை, குடும்பச் சூழல் காரணமாக ஆண்டுதோறும் குறிப்பிட்ட குழந்தைகள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லாத 6 முதல் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் குறித்து ஆக.10 முதல் ஆக.31 வரை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

பதினெட்டு வயதிற்கு உட்பட்ட அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கல்வி உதவித்தொகை உட்பட பல்வேறு உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. இருப்பினும் வறுமை, குடும்பச் சூழல் காரணமாக ஆண்டுதோறும் குறிப்பிட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதை தவிர்க்க, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் ஆண்டுதோறும் பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து, கற்பிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்தாண்டு பள்ளிக்கு புத்தகங்கள் வாங்க வராதவர்கள், பள்ளிக்கே செல்லாத மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் குறித்து ஆக.10 முதல் ஆக.31 வரை கணக்கெடுப்பு நடத்த உள்ளனர். இப்பணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் உட்பட 200 பேர் ஈடுபட உள்ளனர். இவர்கள் வீடு வீடாக சென்று இடைநிற்றல் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

மேலும் இவர்களுக்கு 24 சிறப்பு மையங்களில் வைத்து கல்வி கற்பிக்கப்பட உள்ளது. இடைநிற்றல் மாணவர்களை அடையாளம் கண்டதும் அவர்கள் குறித்த விபரங்களை 'சர்வே ஆப்'பில் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X