அரசின் செயல்பாடுகளுக்கு துணைநிற்பேன் : கவர்னர் தமிழிசை | Dinamalar

இந்தியா

அரசின் செயல்பாடுகளுக்கு துணைநிற்பேன் : கவர்னர் தமிழிசை

Added : ஆக 04, 2021
Share
பாகூர், : ''மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய எந்த விதமான கருத்துக்களை அரசு முன்வைத்தாலும், அதற்கு நான் துணை நிற்பேன்'' என கவர்னர் தமிழிசை கூறினார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, புதுச்சேரி அரசு சார்பில், மணப்பட்டு வனத்துறை தோட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதில், கவர்னர் தமிழிசை பேசியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் 75 ஆயிரம் மரக்கன்றுகள்

பாகூர், : ''மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய எந்த விதமான கருத்துக்களை அரசு முன்வைத்தாலும், அதற்கு நான் துணை நிற்பேன்'' என கவர்னர் தமிழிசை கூறினார்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, புதுச்சேரி அரசு சார்பில், மணப்பட்டு வனத்துறை தோட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதில், கவர்னர் தமிழிசை பேசியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் மட்டுமல்லாது, பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு பசுமையாக்கிட வேண்டும். இது, ஏழரை லட்சம் மரங்களாக பல்கி பெருகிட வேண்டும் என்பது ஆசை. இதற்கு, முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். காலி இடங்களில் மரக்கன்று நடுவோம், காலி பணியிடங்களை நிரப்புவோம் என முதல்வர் அறிவிப்பை வெளியிடும் நிகழ்வாகவும் அமைந்ததில் மகிழ்ச்சி.இங்கு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., அதிகார பகிர்வு குறித்து பேசினார்.

நான் என்றைக்குமே அதிகாரத்தை கையில் எடுத்தது இல்லை என்பது புதுச்சேரி மக்களுக்கு நன்கு தெரியும். என்னை பொறுத்தவரை அன்பு பகிர்வு இருக்கும். இவ்விழாவில் எனக்காக ஒரு பெரிய நாற்காலி போடப்பட்டு இருந்தது. அதை அகற்றி விட்டு, மேடையில் அனைவருக்கும் உள்ளதை போல எனக்கும் ஒரே விதமான நாற்காலியை போட செய்தேன்.நான், ஏற்கெனவே எம்.எல்.ஏ.,க்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தடுப்பூசி பணியை மக்களிடம் முன்னெடுத்து செல்லுங்கள் என்றேன். இப்போது, மரக்கன்றுகளை நட்டு, தொகுதியை பசுமையாக்கிட வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய எந்தவிதமான கருத்துக்களை அரசு முன்வைத்தாலும், அதற்கு நான் துணை நிற்பேன். எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லாமல், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, மரக்கன்று நடும் நிகழ்வை எல்லா இடங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அதிகார பகிர்வுஎம்.எல்.ஏ., கோரிக்கைவிழாவில், பாகூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் பேசியதாவது:அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன். இவர் நினைத்திருந்தால் மீண்டும், மீண்டும் பதவியில் அமர்ந்திருக்கலாம். ஆனால், அவர் வளர்ச்சியை கருதி, ஜனநாயக சிந்தனையுடன், அதிகாரத்தை பகிர்ந்து அளித்தார்.

அதுபோல், புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை, கருத்தில் கொண்டு, கவர்னர் தன்னிடம் உள்ள அதிகாரங்களை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும்.இதற்காக ஒரு குழுவை அமைத்து, என்னென்ன அதிகாரத்தை பகிரிந்து அளிக்க வேண்டும் என முடிவு செய்து, அதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அதுவும், உங்கள் (தமிழிசை) காலத்திலேயே நடந்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X